மாதவிடாய் முதல் மெனோபாஸ் வரை பெண்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Womens Health Care
Womens Health Care

பெண்களுக்கு மாதவிடாய் தோன்றும் பருவத்தில் இருந்தே ஒவ்வொரு சமயமும் உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். அவற்றை சரியான முறைப்படி பராமரித்து கொண்டு வந்தால், மெனோபாஸ்  முடிந்தும் நல்ல ஆரோக்கியத்துடன் திகழ முடியும். அதற்கான சில குறிப்புகளை இப்பதிவில் காண்போம். 

பெண்களுக்கு வீட்டு வேலைகளை சிறந்த உடற்பயிற்சி தான். வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்கள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் அளவுக்கான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். வயதானாலும் மூளை தளராமல் இருக்கும். 

கண் ஆரோக்கியத்தில் கவனம் தேவை:

கண்களின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதில் பெண்கள் தனிக்கவணம் செலுத்த வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு ,சிவப்பு நிறம் உள்ளபழங்களையும் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். சோளம், ஆரஞ்சு பழம், மாம்பழம், கேரட்,கீரை வகைகள் போன்றவைகள் கண்களுக்கு அதிக ஆரோக்கியத்தை தருகின்றன.

பெண்கள் சமையலறை வேலைகளில் கண்களுக்கு எந்த அளவிலும் பாதிப்பு நேரா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். வினிகர், எண்ணெய்  தாளிக்கும்போது எண்ணையில் விழும் தாளிப்பு பொருட்கள் கண்களில் பட்டுவிடக்கூடாது. கண்களில் ஏதாவது பட்டு விட்டால்  காலம் தாழ்த்தாமல் தரமான டாக்டரிடம் சிகிச்சை பெற்று விட வேண்டும். நடுத்தர வயதை கடக்கும் போது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது கண் பரிசோதனை செய்ய வேண்டும். நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்றவை இருந்தால் கண்களின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். 

மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டியவைகள்:

இளம் பருவத்திலிருந்து குறிப்பிட்ட இனிப்பு முதலான எதையும் அதிகமாக உட்கொள்ளாமல் உங்களின் தினசரி உணவுகளில் எல்லா சுவையும் இருக்கும் படி ஆக்கிக் கொள்ள வேண்டும்.  இதனால் பெண்கள் அதிவேகமாக பூப்படைவது நின்று சரியான வயதில் பூப்படைவது நிகழும். 

பூப்படைந்த பருவத்தில் உளுந்து நல்லெண்ணெய் கருப்பட்டி, வெல்லம் போன்றவைகளில் பலகாரங்கள் செய்து கொடுக்க இடுப்பு எலும்புகள் நன்றாக வளர்ச்சியுறும். முட்டை சாப்பிடுவது நல்லது. 

உயர்ச்சத்து 'ஈ' பெண்களுக்கு அவசியம், இதில் பற்றாக்குறை ஏற்பட்டால்  மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. கர்ப்ப உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது . 'ஈ' உயிர்சத்துக்கு முழுக்க முழுக்க தாவரங்களைத் தான் நம்ப வேண்டியிருக்கிறது. கோதுமை, பச்சை மிளகு, பச்சை பட்டாணி, நல்லெண்ணெய், காலிபிளவர், மீன், எண்ணெய், பசலை கீரை, பால் ,கேரட் போன்ற உணவு பொருட்கள் மூலம் இந்த ஈ உயிர்சக்தினை பெறலாம். 

கருவுற்றிருக்கும் காலத்தில் பின்பற்ற வேண்டியவைகள்:

கருவுற்றிருக்கும் காலங்களிலும் நார்ச் சத்து, புரதச்சத்து கொழுப்புச் சத்து, இரும்புச்சத்து கால்சியம் சத்து உள்ள உணவு பொருட்களை தேவையான அளவு கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

கர்ப்பமான பெண்கள் நான்காவது மாதம் முதல் குழந்தை பிறக்கும் பத்தாவது மாதம் வரை தினசரி காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் பாலில் குங்குமப்பூவின் இதழ்களில் ஒரு பத்து இதழ்களை போட்டு ஐந்து நிமிடம் ஊற வைத்து குடித்து வந்தால் பிறக்கும் குழந்தை சிவப்பாக  ஆரோக்கியத்துடன் பிறக்கும். அதோடு குல்கந்தும் தினசரி சாப்பிட்டு வர உடல் அழகு பெறுவதுடன் மலச்சிக்கலும் அகலும். 

கர்ப்பம் தரித்த ஆறாவது மாதம் முதல் பெண்கள் தினசரி இரவு படுக்கைக்கு போகும் முன் வாடாத ஒரு ரோஜா பூவை  எடுத்து இதழ் இதழாக மென்று தின்ன வேண்டும். காலையில் எழுந்ததும் இரண்டு டீஸ்பூன் தேனை ஒரு டம்ளர் தண்ணீரில் கலக்கி சாப்பிட்டு வர வேண்டும்.

கருத்தரித்த மாதத்திலிருந்து கர்ப்பமுற்ற தாய் தினசரி தக்காளி பழத்தை உணவில் குறைவின்றி சேர்த்துக் கொண்டு வந்தால்  நிறமான குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று பெரியவர்கள் கூறுவதை கேட்கலாம். 

குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் கழித்து குழந்தை பெற்றவர்கள் கொள்ளு ரசம், கொள்ளு சாம்பார் வைப்பது சாப்பிட்டால் கருப்பையில் தங்கி இருக்கும் அழுக்கு நீங்கும். பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் உடல் ஊதலும் குறைந்து ஸ்லிம்மாக இருக்கலாம். 

பிஞ்சு வேர்க்கடலையை உப்பு போட்டு கலந்து ஆவியில் வேக விட்டு வெளியே எடுத்து தக்காளி, வெங்காயம், கேரட், வெள்ளரி, இஞ்சி, கொத்தமல்லி இலைகளை பச்சையாக கலந்து, எலுமிச்சைப் பழச் சாறு கலந்து சிற்றுண்டியாக சாப்பிடலாம். பயற்றிலும் இவைகளை கலந்து கொடுக்கலாம். பச்சை புதினாவை கலந்து சாப்பிட்டால்  பற்கள் சுத்தமாகும். மேலும் இந்த சாப்பாடு உடம்பை தேஜசுடன் வைக்கும் எளிமையான உணவு. 

இளமை தன்மையுடன் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்:

மேலும் இளமையாய் ஜொலிக்க ஆரஞ்சுப் பழச்சாறு, பார்லி, சோயா, மொச்சை ஒரு கப், கொண்டைக்கடலை, சுண்டல், வாதுமைப் பருப்பு ஆகியவற்றையெல்லாம் தினமும் நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நலத்தை மட்டும் இல்லாமல் இளமையையும் ஒரே சீராக கட்டுக் கோப்பாக வைத்திருக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஒல்லியாக காணப்படுபவரின் உடலில் குளூட்டா நியான் என்ற இயற்கையான அடினோஅமிலம் காணப்படுகிறது. இது உடல் எடையை ஏறாமல் மற்றும் நச்சு பொருட்கள் ஏற்படாமலும் தடுத்து விடுகிறது. மேலும் இந்த புரத பொருள் முதுமையையும், நோயையும் உண்டு பண்ணுகின்ற ஃப்ரீ ரேடிகல் என்னும் திரவம் அதிகம் சுரக்காமலும் பார்த்துக் கொள்கிறது.

இதையும் படியுங்கள்:
பிரசவத்துக்குப் பின் கூடிப்போன எடையை குறைக்க சில எளிய ஆலோசனைகள்!
Womens Health Care

இதைதொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் ரத்த கொதிப்பு, புற்றுநோய் மற்றும் கொழுப்பு தொடர்பான உயிர்ப்பறிக்கும் நோய்களின் அபாயம் இன்றி வாழ்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். தக்காளி, ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, திராட்சை சாறு போன்றவற்றில் குளூட்டா நியான் நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

நாள்தோறும் உணவுக்குப் பிறகு இரண்டொரு நெல்லிக்காய்களை சாப்பிட்டு வரவும் .அத்துடன் ஒரு சிட்டிகை கடுக்காய் பொடி சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் எப்பொழுதும் இளைமைதான். இளைஞியே! 

இதுபோல் உடல் நலத்தை பேணி வந்தால் கடைசி வரையில் ஆரோக்கியமாக வாழலாம். குழந்தைகளும் ஆரோக்கியமாக வளருவார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com