
* கொத்தவரங்காயில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் ஃபோலேட்டுகள் உட்பட ஏராளமான வைட்டமின்கள் உள்ளன. கொத்தவரங்காய் குறைந்த அளவு கலோரிகளையும், ஏராளமான நார்ச்சத்துக்கள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் தாவர அடிப்படையிலான புரதங்களையும் கொண்டுள்ளன.
* கொத்தவரங்காயில் கால்சியம் சக்தி உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கொத்தவரங்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
* கொத்தவரங்காய் ஒரு வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது. உடலில் உள்ள நரம்புகளை வலுப்படுத்தும் சக்தி கொத்தவரங்காய்க்கு உண்டு.
* ஆஸ்துமா பிரச்சினையைக் குணமாக்கும் ஆற்றல் கொத்தவரங்காய்க்கு உண்டு.
* இது அதிக இரத்த சுரப்பை ஏற்படுத்துகிறது. இரத்த சோகையை நீக்கி, உடலை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருகிறது.
* கொத்தவரங்காய் அடிக்கடி உட்கொள்வது முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் போன்ற சரும பிரச்சினைகளை எதிர்த்து போராட உதவும்.
* சீனி அவரையில் கணிசமான அளவு நார்ச்சத்து இருப்பதால் இது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. அவை குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலைக் குறைக்கின்றன. இதன் மூலம் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகின்றன.
* கர்ப்பிணி பெண்கள் நல்ல சத்தான உணவுகளை சாப்பிடவேண்டியது மிகவும் அவசியம். கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் சாப்பிட்டால் கருவின் ஆரோக்கியம் நன்கு மேம்படும்.
* கொத்தவரங்காயில் உள்ள கிளைக்கோ நியூட்ரியன்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றன.
* உடல் எடையை வெகு விரைவில் குறைக்க விரும்புபவர்கள் உணவில் கொத்தவரங்காய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* கொத்தவரங்காயில் அதிகம் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து இருப்பதால் இது இதயத்திற்கு நல்ல பலத்தை அளிக்கிறது.
* கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். கொத்தவரங்காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைகிறது.
* கொத்தவரங்காயில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சினைகளை சரிசெய்து மலச்சிக்கல் பிரச்சினையை நீக்கும்.
திடீரென அதிக அளவு நார்ச் சத்து உண்பது வயிற்று வலி மற்றும் வாயுவை ஏற்படுத்தும். எனவே, கொத்தவரையை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பத்தியம் இருந்து சாப்பிடுவோர் கொத்தவரங்காயை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பத்தியம் முறிவு உண்டாகும். எடுத்துக்கொண்ட மருந்து வேலை செய்யாமல் போகும். அவர்களும் கொத்தவரங்காயை தவிர்ப்பது நல்லது.