
முலாம் பழத்தில் புரதச்சத்து, கார்போஹைட்டிரேட், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புசத்து, சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் "ஏ', "பி', "சி', ஆக்சாலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
கோடைக் காலத்தில் முலாம் பழம் உடலுக்கு புத்துணர்வை அளிக்கவல்லது மட்டுமின்றி நோய்களையும் தடுக்க கூடியது.
கிருணி பழத்தில் இருக்கக்கூடிய அடினோசின் என்ற ஒரு வகை பொருள் இரத்தத்தை மென்மையாக்குவததோடு இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைவதை தடுப்பதன் மூலம் இருதய பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்கிறது.
இப்பழச் சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு.
கர்ப்பிணி பெண்கள் முலாம் பழம் எடுத்துக்கொண்டால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். குழந்தையின் முதுகெலும்பு, மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
முலாம்பழத்தில் இருக்கக்கூடிய பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற இனிப்புச் சத்துக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.
முலாம் பழம் உள் உறுப்புகளின் உஷ்ணத்தை குறைக்கிறது. வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும். முலாம் பழத்தை தொடர்ந்து உண்டு வர மூல நோய் குணமாகும்.
கிருணி பழத்தில் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்கள், பிளேவனாய்டுகள் மற்றும் கரோடினாய்டுகள் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இது உடலில் செல்களை அழிப்பது மட்டுமில்லாமல் புற்றுநோய் உருவாவதற்கு காரணியாக இருக்கக்கூடிய பிரீ ராடிகல்ஸ் என்று சொல்லக்கூடிய நச்சுக் கழிவுகளையும் வெளியேற்றுகிறது.
முலாம்பழத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான பொட்டாசியம் சத்து இரத்த நாளங்களில் உள்ள அழுத்தத்தை கட்டுப்படுத்தி உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணியாக இருக்கக்கூடிய அதிகப்படியான சோடியம் உப்பையும் குறைக்கிறது.
முலாம்பழம், சிறுநீரக கற்களை கரைப்பது மட்டுமில்லாமல், முலாம் பழத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான நீர்ச்சத்து சிறுநீரைப் பெருக்கி கற்கள் எளிதில் வெளியேறவும் உதவி செய்யும்.
கிர்ணி பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமான வைட்டமின் ஏ, பீட்டா கரோடின் போன்ற சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. கண் திசுக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதோடு கண்களில் புரை உருவாக்கத்தையும் தடுக்கிறது.
முலாம்பழம் இவ்வளவு நன்மைகளை கொடுக்கக்கூடிய பழம் என்றாலும் கூட உடலுக்கு அதிக குளிர்ச்சியை கொடுக்கக்கூடிய ஒரு பழம் என்பதனால சளி, கபம், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் அவதிப்படுறவங்க முலாம் பழத்தினை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மற்றும் வாத நோய்கள் காரணமாக மூட்டு வலி, கீழ்வாதம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், இந்த பழத்தினை தவிர்க்க வேண்டும்.