என் ஃபிட்னெஸ் ரகசியங்கள்!

மார்ச்-08, மகளிர் தின கொண்டாட்டம்!
என் ஃபிட்னெஸ் ரகசியங்கள்!

நான் ஹைதராபாதில் படிக்கும்  கல்லூரி மாணவி. படிக்கும் இந்த காலகட்டத்தில் எனக்கு ஜிம் போன்ற உடற் பயிற்சிக் கூடங்களுக்குச் செல்ல  வசதியும் நேரமும் இல்லை. உடல் ஆரோக்யம், மன ஆரோக்யம் எல்லா வயதினருக்கும் முக்கியமான ஒன்று. நாம் தினசரி கடைபிடிக்கும் சில பழக்கங்களால் ஃபிட் ஆக இருக்க முடியும்.  நான் சுறுசுறுப்படனும் புத்துணர்ச்சியுடனும் இருக்க பின்பற்றும் ஃபிட்னெஸ் ரகசியங்களை பகிர விரும்பகிறேன்.

தினசரி காலையில் சீக்கிரமே எழுந்து எங்கள் வீட்டின் எல்லா அறைகளையும் பெருக்கி சுத்தம் செய்வது தான் நான் செய்யும் ஓர்க் அவுட். இதனால் நல்ல உடற்பயிற்சி கிடைக்கிறது. பிறகு 10 நிமிடங்கள் மொட்டை மாடியில் சூரிய ஓளி படுமாறு நடைப் பயிற்சி.

ஆர். ஜான்ஸி
ஆர். ஜான்ஸி

கல்லூரி கிளம்பும் முன் காய்கறிகள் நறுக்குதல், பாத்திரங்கள் தேய்ப்பது போன்ற வேலைகளில் அம்மாவுக்கு உதவுவேன். நம் வீட்டு வேலைகளை செய்ய தயக்கம் ஏன்? இவையும் நம்மை FIT  ஆக வைத்திருக்க உதவும்.

எங்கள் வீட்டில் ஜங்க் உணவுகளுக்கு தடா.  தரையில் அமர்ந்து தான் சாப்பிடுவேன். காய்கறிகள், கீரைகள், பழங்களுடன் கூடிய பாரம்பரியமான உணவுகள் தான் பெரும்பாலும் என் லஞ்ச் பாக்சில் இடம் பெறும். கல்லூரி விட்டு வந்தவுடன் கட்டாயம் அரை மணி நேரம் மூச்சுப் பயிற்சி. எளிய உடற் பயிற்சிகள் செய்வேன். ( டீ.வி.யை பார்த்தபடிதான்)

கல்லூரியில் POSITIVE ATTITUDE உள்ளவர்களின் மத்தியில் தான் இருப்பேன். இது என் மன ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகிறது. படிப்பில் கவனம் செலுத்தவதுடன் மட்டுமில்லாது ஸ்போர்ட்ஸ் பிற போட்டிகள் என எல்லாவற்றிலும் உற்சாகத்துடன் கலந்து கொள்வதற்கும் என் உடல் மற்றும் மன ஆரோக்கியம் தான் காரணம்.

பள்ளியில் படிக்கும் போது பள்ளிகளுக்கிடையே நடந்த ‘கேலோ தெலுங்கானா’   விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசாகத் தங்க மெடல்கள் பெற்றேன். எங்கள் காலேஜ் விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்று வருகிறேன். நம்  மங்கையர் மலர் கோலப் போட்டியிலும் பங்கேற்று பரிசு பெற்றேன்

இவையெல்லாமே என் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு கிடைத்த பரிசாகவே நினைக்கிறேன். மேலும், இவை வாழ்க்கையில் வரும் பிரச்னைகளை சமாளிக்கவும். வாழ்க்கையில் முன்னேறவும் பெரிதும் உதவுமென நம்புகிறேன்.

R.  JHANSI

B.COM. 1ST YEAR, 

PRAGATHI   DEGREE COLLEGE   FOR   WOMEN

HYDERABAD.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com