-கவிதா பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி. வாழைப்பூவாழைப்பூ மிக எளிமையாக கிடைக்கக்கூடியது அதன் விலையும் குறைவுதான் ஆனால், பயன்கள் ஏராளம். நம் உடலை முழுமையாகச் சுத்தம் செய்யக்கூடியது. இந்த வாழைப்பூ கண்ணில்பட்டால் இனி விடாதீர்கள்.... இதோ வாழைப்பூவின் மருத்துவப் பயன்களைப் பார்ப்போம்.ரத்தத்தைச் சுத்தப்படுத்த: வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் ரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் ரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட்கிரகித்து தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.சர்க்கரை நோயாளிகளுக்கு: ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது..வயிற்றுப்புண் நீங்க: இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம்கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்தப் புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிட்டும்.மூலநோயாளிகளுக்கு: மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.மலச்சிக்கலைப் போக்கும்: சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.பெண்களுக்கு: பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு, அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நல்லது.********************************எலுமிச்சைநமக்கு சாதாரணமாகக் கிடைக்கும் எலுமிச்சம் பழத்தில் எவ்வளவு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது தெரியுமா? அப்பப்பா ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்....மனிதர்களுக்கு ஏற்படும் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது.எலுமிச்சையில் அதிக கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது தாகத்தைப் போக்க உதவும் பானமாகவும் மற்றும் பலவித மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள பழமாகவும் உள்ளது.எலுமிச்சைப் பழத்தைப் போல எலுமிச்சைப் பழத்தின் தோலிலும் ஏராளமான நன்மைகள் உள்ளது.அதிலும் எலுமிச்சை தண்ணீரில் இதை சர்க்கரை சேர்க்காமல் மெல்லிய புளிப்பு சுவையோடு சிறிது உப்பு சேர்த்துக் குடித்து வந்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் இரட்டிப்பு ஆகும்..எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் உடலில் வலி, எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவற்றைக் குறைக்கவும் உதவுகிறது. அதோடு வைட்டமின் சி குறைபாட்டைக் குறைக்கவல்லது.வைட்டமின் சி நிறைந்த உணவுகளில் முதன்மையான இடத்தில் இருப்பது எலுமிச்சையே! இது நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்டது.எலுமிச்சை சாறில் சிறிது உப்பு கலந்து குடிப்பதால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். ஜீரண சக்தியை மேம்படுத்தும். மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் வேலையைச் செய்கிறது.பலரும் இரவில் படுத்ததும் சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுகிறார்கள். எலுமிச்சைச் சாறில் உப்பு கலந்து இரவு தூங்கும்முன் குடித்து வந்தால், நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு படுத்த கொஞ்ச நேரத்திலேயே நல்ல உறக்கம் வரும்.உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் எலுமிச்சை நீர் மிகச் சிறப்பாகச் செயல்படும். இந்தப் பானம் ரத்த சர்க்கரை உப்பில் இருந்து கிடைக்கப்படும் முறையான மினரல் சத்துக்களை உறிஞ்சி இன்சுலின் அளவைச் சீராக்குகிறது. அதனால் ரத்த சர்க்கரை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனைத் தரக்கூடியது.குழந்தைக்காக முயற்சி செய்யும் தம்பதிகள் இரவு நேரத்தில் எலுமிச்சை சாறுடன் இஞ்சி கலந்து குடித்து வரலாம். தொடர்ந்து இந்தப் பானத்தைப் பருகி வந்தால் இயற்கை முறையில் ஆண், பெண் இருவருக்கும் கருவளத்தை ஊக்குவிக்கும் ஆற்றலைக் கொடுக்கிறது.