நீங்கள் அதிகமாகக் கவலைப்பட்டால் பொடுகு வரும். ஆகவே அதைத் தவிர்க்கவும்.
கடையில் கிடைக்கும் ஓட்மீல் நீரை தலைக்குத் தடவி காய்ந்த பிறகு அகலமான பற்கள் கொண்ட சீப்பினால் ஓட்மீல் உதிரும் வரை வார வேண்டும். பிறகு தலை குளிக்க வேண்டும். வாரம் இருமுறை இப்படிச் செய்ய பொடுகு மறையும்.
வேப்பெண்ணையை தலைக்குத் தடவி மசாஜ் செய்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தீக்குளிக்க பொடுகு மறையும்.
தேங்காய் எண்ணையில் வெந்தயம் போட்டு காய்ச்சி அதை தலைக்குத் தேய்த்துக் குளிக்க பொடுகு நீங்கும்.
அரிப்பு உண்டாக்கும் பொடுகு நீங்க…
வினீகரைத் தண்ணீரில் கலந்து முடியில் பஞ்சால் வேர்களில் தடவ வேண்டும்.ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
பாரிஜாத விதைகளை அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க பொடுகு மறையும்.
வேப்பிலையை அனைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க குணம் தெரியும்.
இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் வசம்புப்பொடி அரை தேக்கரண்டி கலந்து பஞ்சால் தலையில் தடவி பத்து நிமிடம் கழித்து அலச பொடுகு நீங்கும்.
வல்லாரைக் கீரையையும் அரைத்து தலையில் தடவிக் குளிக்க பொடுகு மறையும்.
சிலருக்கு எண்ணைப்பசை வியர்வை இரண்டும் தூசியுடன் கலந்து பொடுகு ஏற்படுகிறது. அதை நீக்க சில வழிமுறைகள்
இரண்டு ஸ்பூன் எலுமிச்சைசாறு சிறிது தேங்காய் எண்ணை கலந்து தலையில் தேய்த்து இரண்டு மணிநேரம் ஊறிய பிறகு சீயக்காய் அல்லது ஷாம்பூ தேய்த்துக் குளிக்கலாம்.
மிளகை பொடி செய்து அரை தம்பளர் பாலில் கரைத்து தலையில் தேய்த்து 3 மணிநேரம் ஊறிய பின் குளிக்க பொடுகு மறையும்.
மருதாணி இலையை அரைத்து முடிக்கும் தேய்க்க பொடுகு நீங்கும்
எலுமிச்சைசாறை பஞ்சால் நனைத்து தலையில் தடவி 15 நிமிடங்கள் கழித்து அலச பொடுகு பிரச்னை நீங்கும்.