நேந்திரம் பழத்தில் இத்தனை நன்மைகள் அடங்கியுள்ளதா?

நேந்திரம் பழத்தில் இத்தனை நன்மைகள் அடங்கியுள்ளதா?
Published on

நேந்திரம் பழம் இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கச் செய்கின்றது.

இரும்புச் சத்து குறைபாட்டு நோயான இரத்த சோகைப் பிரச்சினை உள்ளவர்கள் நேந்திரம் பழத்தினை தொடர்ந்து எடுத்து வரவேண்டும்.

நேந்திரம் வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவாகும், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

குழந்தைகள் எடை குறைவாக இருந்தால் அவர்களுக்கு நேந்திரம் பழத்தை கொடுத்து வந்தால் நல்ல தூக்கத்தையும், புது ரத்த உற்பத்தியும், குழந்தைகள் பெறுவார்கள்.

மேலும் இது ஞாபக சக்தியினை அதிகரிப்பதாகவும், உடலினை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவுவதாகவும் உள்ளது.

பழுத்த நேந்திரம், மிளகு, பால் இம்மூன்றையும் கலந்து இரவில் சாப்பிட்டு வந்தால் இருமல் தொல்லை நிரந்தரமாக விலகும்.

நேந்திரம் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதய தசைகள் வலுவடையும். தினமும் நேந்திரப்பழத்தை சாப்பிட்டு வருவதனால் இதய நோயிலிருந்து விடுபடலாம். இதயம் சீராக செயல்படுவதற்கு தேவையான அனைத்து சத்துக்களும் நேந்திரம் பழத்தில் உள்ளன.

நேந்திரம் பழத்தில் உடல் சூட்டினைக் குறைத்து குளிர்ச்சியை அதிகப்படுத்தும் சத்துக்கள் இருக்கின்றன.

காச நோய் உள்ளவர்கள் தினமும் இரவு முட்டையுடன் இந்த நேந்திரம் பழத்தை சாப்பிட்டு வர காச நோய் நீங்கும்.

நேந்திரம் பழத்தை தினசரி உண்டு வருவதனால் சருமத்தைப் பாதுகாப்பதுடன், சருமத்தைப் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com