கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு… வண்ணங்களில் இல்லை வேறுபாடு!

Colours... article!
Colours... article!Image credit - pixabay
Published on

பொதுவாக அழகு என்பது வெண்மையில்தான் என்று பலரும் நினைக்கிறார்கள். அது மிகப்பெரிய தவறு. விளம்பரங்களில் கூட அழகிய பெண்கள் சிவப்பு தோலுடன்தான் இருப்பார்கள். கருப்பாக இருப்பவர்களை அலட்சியத்துடன் பார்ப்பார்கள். திருமணத்துக்கு பெண் பார்ப்பது என்றாலும் மாப்பிள்ளை வீட்டார் சொல்லும் முதல் கண்டிஷன் பெண் நன்றாக சிவப்பாக இருக்கவேண்டும் என்பதே. இந்த நிற வேறுபாடு தற்போது விழிப்புணர்வு பெற்றுள்ளது என்றாலும் இன்னும் பல பெண்கள் மாறவில்லை.

இந்த நிற வேறுபாட்டினால் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பவர்கள் அநேகம் பேர். ஆனால் பொதுவாக கருப்பு என்பது வண்ணங்களிலே சிறப்பான ஒரு இடத்தை கொண்டது என்பது உங்களுக்கு தெரியுமா? கருப்புதான் எனக்கு பிடித்த கலர் என்ற பாடலில் வரும் வரிகளைப்போல தாயின் கருவறை முதல் இறுதியில் அடங்கும் கல்லறைவரை கருமைதான் இடம் பிடித்துள்ளது.

ஒரு அழகான ஓவியம் முற்றுப்பெற வேண்டும் என்றால் அதற்கு  அவுட்லைனாக கரு நிற வண்ணமே பயன் படுத்தப்படுகிறது. இடைக்காலத்தில் குகை ஓவியங்களில் கலைஞர்களால் பயன்படுத்தப்பட்ட முதல் வண்ணங்களில் கருப்பு ஒன்றாகும் என்ற தகவல் உண்டு. கருப்பு என்பது தனித்துவம் மற்றும் அதிகாரத்தின் அடையாள நிறமாக இருந்து வருகிறது, இந்த காரணத்திற்காக இது பொதுவாக நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளால் அணியப்படுவதே இதன் சிறப்புக்கு சான்று.

அழகான வெண்மைத் தோல்தான் ஆரோக்கியம் என்று பெண்கள் நினைப்பது  தவறான கருத்து. கருமை நிறம் கொண்டவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். ஆம் நல்ல ஆரோக்கியமான சருமம் என்றால் அது கருமை வண்ண சருமம் தான். பொதுவாக கரு‌ப்பு ‌நிற‌ம் உள்ளவர்கள் அ‌திகமாக முக‌ப்பருவால் பாதிக்கப்படுவதில்லை.

இதையும் படியுங்கள்:
தேனி மாவட்டத்தின் மிகப் பழமை வாய்ந்த 7 கோவில்கள்!
Colours... article!

ஆடை அலங்காரங்கள் முதல் பளிச்சென்று நகைகள் வரை பொருந்துவது மாநிற மற்றும் கருப்பு நிறம் கொண்டவர்களுக்கு தான். நிறம் கருப்பாக இருந்தாலும் களையான முகம் கொண்டவர்களை அனைவரும் ரசிக்கத்தான் செய்வோம். கரு‌மை நிறம் கொண்டவர்கள் ‌நிற‌த்‌துக்கு ஏ‌ற்று‌க் கொ‌ள்ள‌க்கூடிய உட‌ல் வாகு‌க்கு பொரு‌ந்து‌கிற‌ ஆடைகளையு‌ம், அல‌ங்கார‌த்தையு‌ம் தேர்வு செய்தால் அதுவே அழகு.

குறிப்பாக வெ‌ளி‌ர் ‌நிற‌த்‌திலான ஆடைக‌ள், லேசான‌ அல‌ங்கார‌ம்  கருமை நிறத்தவரை அழகாகக் கா‌ட்டு‌ம். வெ‌ள்ளை‌க் க‌ல் ப‌தி‌ச்ச‌ நகைக‌ள், த‌ங்க நகைக‌ள் கருப்பு நிறத்தை இன்னும் அழகாக்கும். நிறத்தை மேம்படுத்த அழகுக்கலை நிலையத்தை நாடுவது தேவையற்றது. ஏனெனில் பிறவி நிறங்களை மாற்ற இதுவரை எந்த அழகு சாதனங்களும் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

ஆனால் சருமப் பொலிவுக்கு தயிர், சந்தனம், மஞ்சள், முல்தானிமெட்டி, தக்காளிச்சாறு, எலுமிச்சைசாறு, கடலைமாவு போன்ற இயற்கை சார்ந்த பொருள்களைப் பயன்படுத்தி அழகுக்கு அழகு சேர்க்கலாம்.

இப்போது உலகளாவிய அளவில் கருப்பு பற்றி பார்ப்போம். கருப்பு நிறம் என்பது மேற்கத்திய கலாச்சாரத்தில் கடந்து செல்வது, சோகம் மற்றும் துக்கம் ஆகியவற்றைக் குறிக்கிறது.

பண்டைய எகிப்து கலாச்சாரத்தில் கருப்பு மறுபிறப்பு மற்றும் வாழ்க்கையை குறிக்கிறது.

சீனாவில், கருப்பு நிறம் சக்தி, ஸ்திரத்தன்மை மற்றும் அழியாத தன்மையைக் குறிக்கிறது. குறிப்பாக
வெண்மைக்கு எதிராக இருப்பதால், கருப்பு நிறம் பொதுவாக  உலகத்தில் எதிர்மறையான பொருளைக் குறிக்கிறது எனலாம்.

தங்களுடைய வாழ்க்கையின் சவாலான தருணங்களை விரும்புபவர்களுக்கு இந்த நிறம் சக்தியை வழங்குகிறது என்கின்றனர் நிபுணர்கள். இனி கருப்பு நிறம் பற்றிய மனப்பான்மையை விட்டு கருப்பையும் விரும்புவோமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com