(1901 – 2023) நோபல் பரிசு பெற்ற பெண் சாதனையாளர்கள் பட்டியல் தெரியுமா?

நோபல் பரிசு
நோபல் பரிசு
Published on

னித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர் களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர்10ம் தேதி நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

நோபல் பரிசு - உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்று. ஆண்டுதோறும் யாரெல்லாம் இந்தப் பரிசை வெல்லப்போகிறார்கள் என உலகமே உற்று நோக்கும். பரிசை பெறுபவர்களுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய கவுரவத்தை அளிக்கும் நோபல் பரிசை இதுவரை எத்தனை பெண்கள் பெற்றுள்ளனர் எனக் கணக்கிட்டால் நமக்கு அதிர்ச்சியான தகவலே கிடைக்கிறது.

1901ஆம் ஆண்டில் இருந்து 2023ஆம் ஆண்டு வரை 621 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. 1000க்கும் மேற்பட்டோர் நோபல் பரிசை பெற்றுள்ளனர் அதில் 884 ஆண்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இவர்களில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 65தான். குறிப்பாக அறிவியல் துறையில் மிக சொற்பமான பெண்கள்தான் பரிசு பெற்றுள்ளனர். 27 நிறுவனங்கள் நோபல் பரிசு பெற்றுள்ளன.

மேரி கியூரி
மேரி கியூரி

இயற்பியல் துறையில் 1903ஆம் ஆண்டு நோபல் பரிசுப் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை மேரி கியூரி பெற்றார். அதனைத்தொடர்ந்து 1911ஆம் ஆண்டு வேதியியல் துறையில் இரண்டாவது முறையாக இவருக்கு நோபல் வழங்கப்பட்டது. 1963ஆம் ஆண்டு மேரி கியூரியின் மகள், மரியா ஜியோபெர்ட் மேயர்  இயற்பியல் பிரிவில் நோபல் பரிசு பெற்றார்.

5வது பெண்ணாக 2023ஆம் ஆண்டு இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்றவர் பிரான்ஸ் நாட்டின் ஆனிஹீலியா. மேரி கியூரி பல்கலைக்கழகத்தில் படித்தவர். அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களின் உலகத்தை ஆராய்வதற்கான புதிய கருவிகளைக் கண்டறிந்ததற்காக இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

வேதியியல் பிரிவில் இதுவரை 115 நோபல் பரிசுகள் 194 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் 8 பேர் மட்டுமே பெண்கள். 2020ம் ஆண்டிற்கான வேதியியல் துறை நோபல் பரிசு மரபணுவைத் திருத்தி அமைத்ததற்கான வழிமுறையை கண்டறிந்த இமானுவல் சர்பென்டீர்(பிரான்ஸ்), ஜெனிபர் ஏடூட்னா (அமெரிக்கா) என்ற இரண்டு பெண்களுக்கு வழங்கப்பட்டது. நோபல் பரிசை இரு பெண்கள் இணைந்து பெற்றது அதுவே முதல் முறை.

மருத்துவத் துறையில் 114 பரிசுகள் 227 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதில் 12 பேர் மட்டுமே பெண்கள். அதில் 35 முறை இருவர் சேர்ந்து பெற்றுள்ளனர். அமெரிக்காவின் பார்பரா மெக்ளிங்டாக் ‘ஜப்பிங் ஜீன்ஸ்’ கண்டுபிடித்து மருத்துவ நோபல் பரிசை தனி ஆளாக பெற்றார். மருத்துவ துறையின்கீழ் ஒரு பெண் தனியாக நோபல் பரிசு பெற்றது அதுவே முதல் முறை. 2023ம் ஆண்டு 13 வது பெண்ணாக கொரோனா தடுப்பூசி உருவாக்க உதவியதற்காக ஹங்கேரியின் கேட்டபின் கரிக்கோ நோபல் பரிசு பெற்றார்.

கேட்டபின் கரிக்கோ
கேட்டபின் கரிக்கோ

இலக்கியத்துறையில் 116 பரிசுகள், 120 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. 17 பெண்கள் பரிசு பெற்றுள்ளனர். இதில் இலக்கிய பரிசை 16வதாக பெற்றவர், கவிஞர் லூயிஸ் க்ளிக் (77 வயது). 2020ல் இலக்கிய துறையில் பரிசை பெற்ற இப் பெண்மணி இளம் வயதில் ‘அனொரெக்ஸியா’ என்ற நோயால் பாதிக்கப்பட்டவர். இது உணவை உண்ண முடியாமல் அவதிப் ஏற்படுத்தும் நோய். இந்த நோயின் பாதிப்பிலிருந்து மீண்டு வரவே அவர் கவிதைகள் எழுதத் துவங்கினார்.

2020ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக நோபல் பரிசு பெற்றவர்களின் வசிப்பிடத்திற்கு, அல்லது அவர்களின் பணியாற்றிய இடங்களுக்கே சென்று வழங்கப்பட்டது. அதன்படி லூயிஸ் க்ளுக்கிற்கு அவரின் கேம்பிரிட்ஜ் தோட்டத்தில் வைத்து பரிசை வழங்கினார்கள்.

அமைதிக்கான பிரிவில் 98 நோபல் பரிசுகள், 131 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 19 பேர் பெண்கள். இவர்களில் இந்தியாவில் சேவை செய்ததற்காக அமைதிக்கான நோபலை பெற்றவர் அன்னை தெரசா. 120 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைகொண்ட நோபல் சமாதான பரிசு பட்டியலின் வரலாற்றில் அந்த பரிசை பெற்ற 19வது பெண்ணாக நர்கிஸ் முகம்மதி பதிவாகியுள்ளார்.  ஈரானில் பெண்களின் ஒடுக்கு முறைக்கு எதிராகவும், மனித உரிமைகள் - சுதந்திரத்துக்காவும் போராடியமைக்கான நர்கிஸ் முகம்மதிக்கு இந்த முறை சமாதான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் தற்போது ஈரானில் சிறையில் உள்ளார். (விருது அறிவிக்கும்போது சிறையில் இருந்தவர்களில்  மியான்மர் நாட்டின் ஆங்காங்கே சூகியும் ஒருவர்.)

இதையும் படியுங்கள்:
வெங்காயத்தின் அரசியல்: வெங்காய ஏற்றுமதிக்கு தடை!
நோபல் பரிசு

பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு 1969ஆம் ஆண்டு முதல்தான் வழங்கப்படுகிறது. இதுவரை 55 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. பரிசு பெற்ற 93 பேரில் 3 பேர் மட்டுமே பெண்கள். இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை கிளாடியா கோல்டின் என்பவருக்கு இந்தாண்டு நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த கிளாடியா கோல்டின், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான ஆய்வு மேற்கொண்டார். அதன் அடிப்படையில் அவருக்கு இந்த ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வயது வெற்றியாளர்:

பாகிஸ்தான் நாட்டின் மலாலா யூசஃப்சாய்க்கு 17வது வயதில் அமைதிக்கான நோபல் பரிசு 2014 ம் ஆண்டு வழங்கப்பட்டது. நோபல் பரிசின் வரலாற்றிலேயே மிகவும் குறைந்த வயதில் இந்த கௌரவதைப் பெற்றவர் மலாலாதான். நோபல் பரிசை வென்றபின் மலாலா யூசஃப்சாய், மிக இளம் வயதில் ஐ.நாவின் அமைத்திக்கான தூதுவராகவும் நியமிக்கப்பட்டார்.

மலாலா யூசஃப்சாய்
மலாலா யூசஃப்சாய்

தம்பதிகள் பட்டியல்:

மேரி கியூரி, பியரி கியூரி இணைந்து 1903-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது தம்பதியினர். அவர்களைத் தொடர்ந்து 1935-ல் பிரெட்ரிக் ஜோலியட் மற்றும் ஐரினே ஜோலியட் தம்பதியினர் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றனர். 1947-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசை கார்ல் கோரி, கெர்ட்டி கோரி தம்பதியினரும் 1974-ல் ஆல்வா மிர்டால், குன்னார் மிர்டால் தம்பதியினர் பொருளாதார அறிவியலுக்காகவும் நோபல் பரிசு பெற்றனர். கடந்த 2014-ம் ஆண்டு எட்வர்ட் மோசேர் மற்றும் மே பிரிட் தம்பதியினர் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வென்றனர்.

அடுத்து  6-வது தம்பதியினராக அபிஜித், எஸ்தர் இணைந்து பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.

அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ
அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ

2019-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிரெம் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உலகளாவிய வறுமை ஒழிப்பு தொடர்பான ஆய்வுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.நோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி என்கிற பெருமைக்குரியவர்களாகி இருக்கின்றனர் அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டூஃப்லோ.இந்த நோபல் பரிசை பெற இந்தியர்களான இந்த தம்பதிகள் வேஸ்டி சட்டை மற்றும் சேலை அணிந்து வந்து அசத்தினார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com