
வட கொரியா நாடு பல விசித்திரங்களுக்கு பெயர் பெற்றது. அந்த நாட்டு சர்வாதிகாரி கிம் ஜாங் உன் மிகவும் விசித்திரமான மனிதர். அந்த நாடு அவர்களின் குடும்பத்தின் பிடியில் சிக்கி நீண்ட காலமாக தவித்துக் கொண்டுள்ளது. அந்த நாட்டில் பல்வேறு வித்தியாசமான சட்டங்களும் , விசித்திரமான பல்வேறு தண்டனைகளும் உள்ளன.
வடகொரியாவில் ஆண்களும், பெண்களும் நீல நிற ஜீன்ஸ் அணிவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது . உடைகளில் எந்த ஒரு மேற்கத்திய அடையாளங்களும் இருக்கக் கூடாது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிறைய ஆடைக் கட்டுப்பாடு உள்ளது.
வட கொரியாவில் பெண்கள் குட்டைப் பாவாடை அணிய தடை உள்ளது. பெண்கள் அணியும் பாவாடையும் , பேண்ட்டும் முழங்கால் வரை இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹை ஹீல்ஸ் கட்டாயம் அணியக் கூடாது. அரசாங்கம் அனுமதி கொடுத்துள்ள முறைப்படி தான் அங்கு முடி வெட்ட முடியும் , தங்கள் இஷ்டத்துக்கு எல்லாம் முடி வெட்ட முடியாது. மீறி முடி வெட்டினால் , வாடிக்கையாளர் மற்றும் முடி வெட்டுபவர் ஆகிய இருவருக்கும் மிகவும் கடுமையான சிறை தண்டனை உண்டு. அது போல உடைக் கட்டுப்பாட்டை மீறி நடப்பவர்களுக்கும் கடும் சிறை உண்டு. அதனால், மக்கள் யாரும் இந்த சட்டங்களை மீறுவதில்லை.
வட கொரிய மக்களுக்கு அந்த நாட்டை தாண்டி வெளியுலகம் இருப்பதே பெரும்பாலும் தெரியாது. அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே அங்கு ஒளிபரப்பப்படுகிறது. அங்கு பைபிள் படிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. யாராவது பொதுவில் மதத்தைப் பின்பற்றுவதைக் கண்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இப்படி பல விசித்திரமான விதிகள் இருந்தாலும் இதைத் தாண்டிய சட்டம் ஒன்று உள்ளது. அது பெண்கள் மாதசுழற்சி நாட்களில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கான தடை என்பது தான்.
வட கொரியாவை ஆளும் சர்வாதிகாரி கிம் ஜாங் இப்படி ஒரு நடைமுறையை வைத்துள்ளார். அரசாங்கம் இதற்கு நேரடி தடை விதிக்காமல், சந்தைகளில் விற்க தடை செய்துள்ளது. இவை "மேற்கத்திய நாகரீகத்தின் கலாச்சாரம்" என்பதால், அதை தடை செய்துள்ளதாக கூறப்படுகிறது. பல பெண்கள் மாதசுழற்சி காலத்தில் அதிக வலியை அனுபவிக்கிறார்கள்.
பொதுவாக, அந்த காலக்கட்டத்தில் பெண்கள் எந்த வேலையும் செய்வதிலோ அல்லது வெளியே செல்வதிலோ, எந்த சங்கடமும் இல்லாமல் இருக்க சானிட்டரி பேட்கள், டம்பான்கள், மாதசுழற்சி கோப்பைகள் மற்றும் சிறப்பு உள்ளாடைகள் போன்றவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், பெண்கள் தங்கள் அன்றாடப் பணிகளை எளிதாக முடிக்க முடிகிறது.
ஆனால், வட கொரியாவில் சானிட்டரி நாப்கின்கள், டம்பான்கள் அல்லது மாதசுழற்சி கோப்பைகள் என அனைத்தையும் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வட கொரியாவில் உள்ள கடைகளில் சானிட்டரி நாப்கின்கள் உள்ளிட்ட சாதனங்கள் விற்பனை செய்யப் படுவதில்லை. அங்கு வசிக்கும் பெண்கள் பழைய காலங்களைப் போலவே மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
அங்கு துவைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிகளை மட்டுமே சந்தைகளில் விற்பனை செய்கிறார்கள். இதனால் , பெண்களுக்கு தனிப்பட்ட சுகாதாரத்தை கடைப்பிடிக்கும் வாய்ப்பு பெருமளவில் குறைகிறது. அவர்களுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.