மசாலாக்களை சமைக்க மட்டுமல்ல, பக்குவமாக பாதுகாக்கவும் தெரியனும்...!

மசாலாப் பொருட்கள்...
மசாலாப் பொருட்கள்...Image credit - pixabay.com
Published on

ண்டைய காலங்களில் உணவைப் பாதுகாக்க அல்லது நீண்ட காலத்திற்கு சமைப்பதன் மூலம் இழந்த சுவையை மாற்றுவதற்கு மசாலாப் பொருட்கள் பயன் படுத்தப்பட்டன.  பொதுவாக தமிழர்களின் சமையலில் மசாலாப் பொருட்கள்  முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதனை பயன்படுத்துவதால் உணவிற்கு இயற்கையாகவே மணம், நிறம், சுவை கிடைக்கின்றன. அத்துடன் இவற்றைத்தாண்டி ஆரோக்கியமான நன்மைகளையும் மசாலாக்கள் கொடுக்கின்றன. எனினும், எந்தப் பொருளுக்கும் காலாவதி காலம் உண்டு அது மசாலாப் பொட்களுக்கும் பொருந்தும்.

சமையலுக்கு உபயோகப்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அதன் மணம், சுவை மாறுபட வாய்ப்பு உண்டு. மொத்தமாக வாங்கி சேமித்து வைப்பதால் தேவை, நேரம், பணம் இவைகளை மிச்சமாக்கலாம். அந்த வகையில் மசாலாப் பொருட்களை எப்படி நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்பதனை பார்க்கலாம்.

சமையலுக்கு...
சமையலுக்கு...Image credit - pixabay.com

மசாலா பொருளை பயன்படுத்திய பின்னர் அதன் பாட்டில் மூடிகளை உடனடியாக மூடி விட வேண்டும்.

மசாலா பொருட்களை சூரிய ஒளியில் படும்படி வைக்கக் கூடாது. காற்று புகாத கலன்களில் குளிர்ச்சியான இடங்களில் வைப்பது சிறந்தது.

பத்தரப்படுத்தும்போது கண்ணாடி அல்லது மெட்டல் பாத்திரங்களை பயன்படுத்துவது சிறந்தது.

பொடிகளை கடைகளில் வாங்கி பயன்படுத்துவதை விட முழு மசாலா பொருட்களை வாங்கி பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனில் பொடி வாங்கி வைக்கும்பொழுது அது பழுதாக வாய்ப்பு இருக்கின்றது.

சமையல் அறையில் ஈரம் படக்கூடிய இடங்களில் மசாலாக்களை வைக்காமல் இருப்பது நல்லது.

கடைகளில் இருந்து வாங்கும் மசாலா பொருட்களின் கலாவதியாகும் தேதி அதன் பெயர் என்பவற்றை சிறு  துண்டு சீட்டில் எழுதி வைப்பது நல்லது.

மசாலாக்களை மறந்தும் இரும்பு பாத்திரங்களில் போட்டு விடாதீர்கள். இதன் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும்.

நீங்கள் கடையில் வாங்கிய பிறகு பாக்கெட்டில் இருந்து சீரகத்தை எடுத்து சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது. அதை சேமித்து வைப்பதற்கு முன் கழுவி, வறுப்பது அனைத்து அழுக்குகளையும் அகற்றி பயன்படுத்தி, அதிகபட்ச ஊட்டச்சத்து நன்மைகளைப் பெற முக்கியம், மேலும் வறுத்த பிறகு வறுத்த சீரக விதைகளின் வாசனை எதுவும் நீங்காது.

குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு மசாலா காலாவதியாகும், காலாவதியாகிவிட்டதா இல்லையா என்பதை அறிய, நீங்கள் கொஞ்சம் எடுத்துக் கொண்டு  பிசையும்போது மசாலா வாசனை கிடைத்தால், அது புதியது, இல்லையெனில் அது காலாவதியானது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மசாலாப் பொருட்களில் ஈரப்பதம் இருப்பதால் அவற்றை பொடியாக நசுக்குவது கடினம். வாசனையை இழக்காமல் ஈரப்பதத்தை வெளியேற்ற குறைந்த வெப்பத்தில் மசாலாப் பொருட்களை வறுப்பது அல்லது வெயிலில் காயவைப்பது  நல்லது.

இதையும் படியுங்கள்:
வாழ்வியல் பாடத்தை உணர்த்தும் வியாபார யுக்தி!
மசாலாப் பொருட்கள்...

மசாலாப் பொருட்கள் காலாவதியானால், அவற்றின் சுவை, நிறம் மற்றும் தரம் உணவின் தரத்தை குறைக்கும். காலாவதியான மசாலாப் பொருட்கள் பெரும்பாலும் பாக்டீரியா தொற்றுகளை ஏற்படுத்தும். இது வயிற்று வலி, வாந்தி மற்றும் பிற செரிமான பிரச்சனைகள் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சிலருக்கு அலர்ஜியை உருவாக்கும்.

மசாலாப் பொருட்களின் காலநிலை என்பது அவற்றின் வகை மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும். உற்பத்தி தேதி, பேக்கிங் மற்றும் தயாரிப்பு பொருட்கள் போன்றவை அதன் ஆயுளைத் தீர்மானிப்பதில்  பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான மசாலாப் பொருட்களின் காலம் சில வாரங்கள் முதல் மாதங்கள் அல்லது 1 வருடம் வரை இருக்கலாம். பொதுவாக 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தி வருவதை தவிர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com