மாதவிடாய் வலிக்கு தீர்வு இதுதான்!

Menstruation
Menstruation
Published on

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் அதிக வயிறு வலி ஏற்படுவது வழக்கம். சில பெண்களுக்கு அதிக மனநிலை மாற்றங்களும் அந்த சமயத்தில் ஏற்படும். அதாவது சில நேரம் கோபம், கவலை, மகிழ்ச்சி என அவர்களது மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். சில பெண்கள் எழுந்து கூட நிற்க முடியாமல் வலியால் சிரமப்படுவார்கள்.

பெண்கள் தங்கள் தினசரி உணவுகளில் இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் கூட, மாதவிடாய் நாட்களில் சிறிது தெம்போடு இருக்கலாம். ஆனால் அவ்வாறு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால், மாதவிடாய் சமயங்களில் அதிக சோர்வு மற்றும் வலியை உணர்கின்றனர். எனவே மாதவிடாய் காலங்களில் ஆவது சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

மாதவிடாய் காலங்களில் ஊட்டச்சத்து அளிக்கும் உணவுகள்

பால் சார்ந்த பொருட்கள்

தயிர் போன்ற பெரும்பாலான பால் மற்றும் பால் பொருட்கள் கால்சியத்தின் சிறந்த ஆதாரங்களாக விளங்குவதால், பால் சார்ந்த பொருட்களை மாதவிடாய் சமயங்களில் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், மாதவிடாய் அறிகுறிகளான மாதவிடாய் பிடிப்புகள், மனநிலை மாற்றங்கள் மற்றும் சோர்வு போன்றவற்றை சரி செய்ய கால்சியம் உடலுக்கு தேவைப்படுகிறது.

மேலும் பால்களில் வைட்டமின்கள் D , E மற்றும் மெக்னீசியம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் மாதவிடாயின் போது வலி நிவாரணம் அளிப்பதாக கூறப்படுகிறது.

தண்ணீர்

தண்ணீர் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்று. தண்ணீர் அருந்துவதால், மாதவிடாய் வலி குறையும். நீங்கள் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் C  ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். ஆரஞ்சுகளில் அதிக நீர்ச்சத்தும் உள்ளது. எனவே இதை மாதவிடாய் நாட்களில் எடுத்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பிசிஓடி(PCOD) பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?
Menstruation

ஸ்ட்ராபெர்ரி

ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியில் அதிக வைட்டமின் C மற்றும் 3 கிராம் நார்ச்சத்து உள்ளதாம். 300 க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில், தினமும் ஸ்ட்ராபெர்ரிகளை சாப்பிடாத பெண்களை விட, தினமும் ஸ்ட்ராபெர்ரிகளை சாப்பிடும் பெண்களுக்கு மாதவிடாய் வலி குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஓட்ஸ்

ஓட்ஸ் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனளிக்குமாம். ஓட்ஸ் சாப்பிடுவது  உணவில் நார்ச்சத்து சேர்க்க உதவியாக இருக்கும். ஓட்ஸில் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் B1 ஆகியவை இருப்பதால் மாதவிடாய் வலிக்கு தீர்வாக இருக்கும் என கூறப்படுகிறது. 

ஆலிவ் ஆயில்

ஆலிவ் எண்ணெயில் உள்ள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சேர்மங்கள் பிடிப்பைக் குறைக்க உதவும் என கூறப்படுகிறது. ஆலிவ் எண்ணெய் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை வைத்திருப்பதால், இது மாதவிடாய் வலியைக் குறைக்க உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் குறைந்தது 70% கோகோவைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளதால், மாதவிடாய் நாட்களில் இதை எடுத்துக்கொள்ளலாம்.

மேலும், இரும்புசத்து, கால்சியம் நிறைந்த பச்சை காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஐஸ்கிரீம் மற்றும் சீஸ் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை பெண்கள் மாதவிடாய் நாட்களில் குறைவாக சாப்பிட வேண்டும். அதேபோல, அதிக உப்பு சாப்பிடுவது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே உணவில் அதிக சர்க்கரை அல்லது உப்பு இல்லாமல் இருப்பது மிக முக்கியம்.

மேலும், புகைபிடித்தல், மது அருந்துதல் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். காரமான உணவுகள், காஃபின், குளிர்பானங்கள் போன்ற சில உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com