

தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2ஸ்பூன்
சோம்பு - 1/2ஸ்பூன்
வர மிளகாய் - 2
கருவேப்பிலை - 1ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
பெரிய வெங்காம் நீள் வாக்கில் நறுக்கியது - 1
கருவேப்பிலை - 1கொத்து
இஞ்சி பூண்டு விழுது - 1/2ஸ்பூன்
தக்காளி நறுக்கியது - 1
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1கப்
மரவள்ளி கிழங்கு வேக வைத்து மசித்தது - 2
கொத்தமல்லி கீரை - சிறிது
செய்முறை :
முதலில் நாம் வைத்திருக்கும் இரண்டு மரவள்ளி கிழங்குகளை குக்கரில் போட்டு வேக வைத்து பின் வேக வைத்த மரவள்ளி கிழங்கை மசித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி. பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, அரை டீஸ்பூன் சோம்பு, இரண்டு வரமிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர், இந்த தாளிப்புடன் நாம் நீள வாக்கில் நறுக்கி வைத்திருக்கும் ஒரு பெரிய வெங்காயம், ஐந்து பச்சை மிளகாய் மற்றும் அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்பு இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போய் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன், இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிகொள்ளுங்கள்.
பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இதனுடன் ஒரு கப் அளவு தண்ணீர் மற்றும் நாம் மசித்து வைத்திருக்கும் மரவள்ளி கிழங்கு சேர்த்து கடாயை மூடி வைத்து நன்கு கொதிக்கவிடுங்கள். பின் பூரி கிழங்கு மசாலா கெட்டியான பதத்திற்கு வந்ததும் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடுங்கள்.
அவ்வளவுதான் காரசாரமான பாலக்காடு பூரி கிழங்கு மசாலா இனிதே தயாராகிவிட்டது.
-கலைமதி சிவகுரு