தினம் ஒரு பாயசம்! திடீர்ப் பாயசம்- 7

தினம் ஒரு பாயசம்! திடீர்ப் பாயசம்- 7
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on
nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

தேவையான பொருட்கள்:

ரெடிமிக்ஸ் பாதாம் பவுடர் – ½  கப்,  மில்க் மெய்டு - 4  டேபிள் ஸ்பூன், கோதுமை மாவு 4 டேபிள் ஸ்பூன்,  அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்,  நெய் - 4  ஸ்பூன்,  ஏலப்பொடி ½ ஸ்பூன்.

செய்முறை:

நெய்யை அடிகனமான கடாயில் 3 ஸ்பூன் விட்டு கோதுமை மாவைச் சேர்த்து நன்கு வறுக்கவும். பிறகு அரிசி மாவைச் சேர்த்து 2 நிமிடம் வறுத்தபின் பாலைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும். அடுப்பைக் குறைத்து வைத்துக்கொள்ளவும். நன்றாகக் கட்டியில்லாமல் கரைத்த பின் சர்க்கரை, ஏலப்பொடி, பாதாம் பவுடர் இவற்றைச் சேர்த்து 2 நிமிடம் கொதித்ததும் மில்க்மெய்டு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி விடவும். நெய்யில் திராட்சையை வறுத்துச் சேர்த்து சூடாகப் பரிமாற சுவையாக இருப்பதுடன் செய்வதும் மிகவும் எளிது.

(ரெடிமிக்ஸ் பாதாம் பவுடர் இல்லையென்றால் பால் பவுடர் 4 ஸ்பூன் கரைத்துக்கொண்டு பூஸ்ட், போர்ன்விட்டா இவற்றில் ஏதாவது ஒன்றை 2 ஸ்பூன் சேர்த்துக் கரைத்தும் செய்யலாம். அவசரமாகச் செய்ய இந்த முறையில் பாயசம் செய்து சமாளிக்கலாம்.)

logo
Kalki Online
kalkionline.com