கணவன் கொடுமைகளிலிருந்து நிவாரணம் கிடைக்க பழையனூர் நீலி அம்மன் வழிபாடு!

திருவாலங்காடு பழையனூர் நீலி அம்மன் கோவிலின் வரலாறு, கணவனைப் பழிவாங்கிய அமானுஷ்ய கதை மற்றும் 70 வேளாளர்கள் தீக்குளித்த வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.
 பழையனூர் நீலி அம்மன் கோவில்
பழையனூர் நீலி அம்மன் கோவில்AI Image
Updated on
MM strip
MM strip

காஞ்சியிலிருந்து வந்த புவனபதி, மனைவி நவக்கியானியை கொன்ற பாவத்தால் பிறவிப்பிறவி துன்பம் அனுபவித்து, தரிசனனாக மறுபிறவி எடுத்து நீலியின் கோபத்தால் அழிவைச் சந்தித்த கதை, திருவாலங்காடு–பழையனூர் நீலி அம்மன் கோவிலின் தல வரலாறாக சொல்லப்படுகிறது. இங்கு வழிபடும் பெண்களுக்கு கணவன் கொடுமைகளிலிருந்து விடுதலை, மன உறுதி கிடைக்கும் என நம்பப்படுகிறது.

பஞ்ச சபைககளில் திருவாலங்காடு இரத்திரசபை என்று இது அழைக்கப்படுகிறது. நீலி அம்மன் கோவில்‌ திருவாலங்காடு அருகில் உள்ளது‌. ஆச்சர்யமும் அமானுஷ்யமும் நிறைந்தது நீலி அம்மன் கோவில்‌. கண்ணகி எப்படி பெண் தெய்வமாக திகழ்கிறாள்... அவரைப்போல் துரோகம் செய்த கணவனைப் பழிதீர்த்த நீலியம்மனும் தெய்வமாக வணங்கப்படுகிறாள்.

தல வரலாறு

காஞ்சியில் புவனபதி என்ற அந்தணர் இருந்தார். அவர் காசி யாத்திரை சென்றபோது, அங்கு சத்தியஞானி என்பவர் அவரை விருந்துக்கு அழைக்க, அங்கு சென்றவர் சத்தியஞானியின் மகள் நவக்கியானியை மணந்து கொண்டார்‌. இவர் தன் காஞ்சி குடும்பத்தை பற்றி அவளிடம் மறைத்து விட்டார்.

சிலகாலம் கழித்து காஞ்சிக்கும் கிளம்பினார். அவருடன் மனைவி நவக்கியானி மற்றும் அவள் சகோதரன் சிவக்கியானியும் வந்தான். இவர்கள் திருவாலங்காட்டை அடைந்தனர்‌. மனைவியைக் கொல்ல நினைத்து, புவனபதி தன் மைத்துனனை தண்ணீர் தெண்டுவர அனுப்பினார். அவன் சென்றதும் மனைவியைக் கொன்று ஊருக்குச் சென்றுவிட்டார். திரும்பி வந்த அண்ணன், தங்கை இறந்தது கண்டு தானும் தூக்கில் தொங்கினான். இவர்கள் இருவரும் நீலன், நீலியாக ஆலங்காட்டையே சுற்றிச் சுற்றி வந்தனர். ஒரு பிறவி முடிந்தது.

 பழையனூர் நீலி அம்மன்
பழையனூர் நீலி அம்மன் AI Image

அடுத்த பிறவியில் புவனபதி வைசிய குலத்தில் பிறந்தான். தரிசனன் அவன்பெயர் ஆனது. ஊரில் ஜோசியர் அவருக்கு வடக்கில் பேய் ஒன்று பழிவாங்க காத்திருப்பதாக கூறினார் இவன் தந்தை இவனுக்கு மந்திரக் கத்தியைக் கொடுத்துவிட்டு இறந்தார்‌. இது இப்படி இருக்க, திருவாலங்காட்டில் நீலனும் நீலியும் ஒரு தம்பதிக்கு குழந்தைகளாகப் பிறந்தனர். இவர்கள் இருவரும் இரவில் பேயாக மாறி ஆடுமாடுகளைக் கொன்று இரத்தத்தைக் குடிப்பார்கள். இதனால் பயந்த பெற்றோர் அவர்களை வேலமரத்தில் கட்டி விட்டு வந்துவிட்டார்கள்

இதையும் படியுங்கள்:
Shin Gi Tai: வாழ்வை மேம்படுத்தும் ஜப்பானிய மனநிலையான ஷின் கி தை பற்றித் தெரியுமா?
 பழையனூர் நீலி அம்மன் கோவில்

நீலனும் நீலியும் பழிவாங்கத் தனியாகப் பிரிந்தார்கள். நீலன் வேலமரத்திலேயே தங்க, நீலி திருவாலங்காடு சென்றாள்‌. நீலன் வசித்த வேலமரத்தை கலப்ப்பைக்காக ஊர்மக்கள் வெட்டிவிட்டனர்‌. கோபம் கொண்ட நீலன், கோவில் குருக்கள் ஒருவரை அடித்துவிட்டான்‌. குருக்கள் சிவனிடம் முறையிட, ஈசன் அவனைக் கொன்றார். இதை அறிந்த நீலி, சாவுக்கு காரணமான வேளாளர்களை பழிதீர்க்க சபதம் ஏற்றாள்.

இந்த சமயத்தில் காஞ்சியிலிருந்து தரிசனன் வியாபாரத்திற்காக திருவாலங்காடு சென்றான். கையில் மந்திரக்கத்தி இருந்ததால் அவன் பயப்படவில்லை‌. நீலி அவனை அடையாளம் கண்டு கொண்டாள். அவன் மனைவி உருவம் எடுத்து கையில் ஒரு குழந்தையுடன் தலைவிரி கோலமாக பஞ்சாயத்தைக்கூட்டி தரிசனன் தனக்கு துரோகம் செய்து வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதாகக் கூறினாள். "அவர் என்னைக் கொன்றுவிடுவார்.

இதையும் படியுங்கள்:
Yu Youzhen: கோடீஸ்வர துப்புரவுத் தொழிலாளி யு யூஷென் - சந்திப்போமா?
 பழையனூர் நீலி அம்மன் கோவில்

அவர் கையில் கத்தி உள்ளது" என்று கூற, மக்கள் நம்பி 70 வேளாளர்கள் கத்தியை பிடுங்கி அவர் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அனைவரும் உயிரை மாய்ப்பதாகக் கூறினர். தரிசனன் அவள் மனைவியல்ல பேய் என்று கூறியும் அவர்கள் நம்பவில்லை.

நீலியுடன் சென்ற தர்சனனை நீலி கொன்றாள்‌. இதை அறிந்து 70 வேளாளர்களும் சாட்சிபூதேஸ்வரர் ஆலயம் முன்பு தீக்குளித்தனர்‌. நீலிக்கு இங்கே கோவில் உருவானது. பழையனூர் நீலியை வழிபட்டால் மனதைரியம் பெறலாம். கணவன் கொடுமைகளில் இருந்தும் விடை பெறலாம்‌.

மன உறுதியுடன் மறு ஜென்மம் எடுத்துப் போராடி கணவனைக் கொன்று உக்கிர தெய்வமாக நீலி மாறினாள்‌. திருவாலங்காட்டில் நீலிக்கு சிறிய கோவில் உள்ளது. திருவாலங்காட்டிலிருந்து முக்கால் கிலோ மீட்டர் தூரத்தில் பழையனூர் உள்ளது‌. இங்கே நீலிகோவில், பஞ்சாயத்தார் தீக்குளித்த மண்டபமும பூதேஸ்வர் கோவிலும் உள்ளன. அதனுடைய கல் வெட்டுக்கள் நீலியின் புகழை பறைசாற்றுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com