

இந்த கட்டுரை Shin Gi Tai என்ற ஜப்பானிய மனநிலையை அறிமுகப்படுத்தி, வெற்றி என்பது தொடர்ச்சியான பயணம் என்றும், மனம், திறமை, உடல் ஆகியவை ஒன்றை ஒன்று பூர்த்தி செய்யும் போது மட்டுமே உண்மையான வளர்ச்சி சாத்தியம் என்றும் கூறுகிறது. உறவுகள், தொழில், உடல் ஆரோக்கியம், உணர்ச்சி கட்டுப்பாடு போன்ற துறைகளில் இந்த தத்துவம் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் கருவியாக விளக்கப்படுகிறது.
வாழ்க்கையில் வெற்றி என்பது முடிவல்லா தொடர் பயணம்தான். ஜப்பானிய ஷின் கி தை (Shin Gi Tai) தத்துவம் இதை நன்கு உணர்த்துகிறது. நமக்கு மிக முக்கியமான மனம், திறமை மற்றும் உடல் மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும்.
தலைமைத்துவம் என்பது இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் மட்டும் இருந்தால் போதாது. மனம் , திறமை மற்றும் உடல் இவற்றில் சமநிலையான தன்மை முக்கியமானதாகும். உங்கள் உறவுகளில் மேம்பாடு, மற்றும் உடல் திறமை மற்றும் மன ஒருங்கிணைப்பில் இந்த ஷின் கி தை தத்துவம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
நம்முடைய குறிக்கோளை அடைய நல்ல மனநிலை, தொடர் படிப்பு, மற்றும் உடல் மற்றும் ஆரோக்கியமான உணர்வுகள் தேவையாக இருக்கிறது.
ஷின் கி தை (Shin Gi Tai):
ஷின் (Shin):
ஷின் என்பது ஒருவரின் மனநிலை, குணம், உணர்வுகள் மதிப்புகள் மற்றும் உள் வலுவைக் குறிக்கிறது. ஒழுக்கம் , பொறுமை, உறுதியும் இது பிரதிபலிக்கிறது. நல்ல அமைதியான மனம் என்பது எப்பேர்ப்பட்ட கடுமையான சூழலையும் சமாளித்து முன்னேறுகிறது.
கி (Gi) திறமை:
கி என்பது அறிவு, தொழில் நுட்பம், மற்றும் நம் திறமைகளை நன்கு பயன்படுத்திக் கூடிய அறிவைக் குறிக்கிறது. இது பயிற்சியையும் அனுபவங்களையும்,நம் தொடர் மேம்பாடுகளை யும் உணர்த்துகிறது விளையாட்டோ, வேலையோ அல்லது படைப்புத் திறனோ நம் முழு ஈடுபாட்டையும் , தொய்வில்லாமல் தொடர் முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது.
தை (Tai);
உடல் மற்றும் மனதின் வலிமை. இது உடல் ஆரோக்கியத்தையும், சக்தி மற்றும் பொறுமையையும் குறிக்கிறது. நாம் அடைய வேண்டிய லட்சியங்களுக்கு அஸ்திவாரம் நம் உடல்தான். ஆகவே நல்ல ஆரோக்கியமாக இருப்பது நம் தொடர் லட்சியங்களை நிறைவேற்ற ஏதுவாக இருக்கிறது.
ஒழுக்கம் நம்பிக்கையின் அடிப்படையில் உறுதியான மனம் சாத்தியமாகிறது. நம் எண்ணங்கள் நம் பழக்கம் மற்றும் செயல்பாடுகள் மூலமாக வெளிப்படுகிறது. மனதை மட்டுமே ஒழுங்குபடுத்துவதோடு உடலையும் பேணிக் காப்பதால் நாம் அடைய வேண்டியதை சுலபமாக அடைய முடிகிறது.
ஷின் கி தை (Shin Gi Tai) மனநிலை தரும் பயன்கள்:
மன உறுதி, உணர்வுகளின் ஒழுக்கம் மூலம் நமக்கு ஏற்படும் கடுமையான சூழல்களை எதிர்த்து சாதிக்க முடியும்.
திறமை என்பது முழு அர்ப்பணிப்பு. தொடர் கற்றல் மற்றும் தொடர் அனுபவங்கள் மூலம் தனித்தன்மை பெறுகிறோம்
மனம் உடல் மற்றும் திறமைகளை சமப்படுத்துதல் மூலம் நம் வளர்ச்சி மேம்படுத்தப்படுகிறது.
இந்த நவீன உலகத்தில் ஷின் கி தை தத்துவம் தொழிலில் மேம்பாடு, வளர்ச்சி, தலைமைத்துவம் மற்றும் கடுமையான சூழல்களை நேர் கொள்ளும் வலிமையைத் தருகிறது.
இந்த மனநிலை நம் எல்லா சக்திகளையும் ஒருங்கிணைத்து தொடர் வெற்றிகளை சாத்தியமாக்கி நம் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
நிலையான வெற்றி என்பது மனம் உடல் மற்றும் திறமையை சமப்படுத்தி அதிலிருந்து கிடைப்பது தான் நிலையான வெற்றி ஆகும். இதை ஷின் கி தை தத்துவம் அழகாக தெளிவாக்குகிறது.
நாம் நம் வாழ்க்கையில் நல்ல குறிக்கோளை அடைய ஆசை மட்டும் பட்டால் போதாது. நாம் அதற்காக நம் உடல், மனம் மற்றும் செயல்பாடுகளை நல்ல சமநிலையில் வைத்திருந்தால் மட்டுமே நாம் நினைத்ததை சாதிக்க முடியும். அத்தகைய சமநிலையை வெளிப்படுத்தும் ஜப்பானிய ஷின் கி தை தத்துவத்தை மேற்கொண்டு நம் வாழ்வை மேம்படுத்திக் கொள்வோம்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், உங்களின் உள்ளார்ந்த ஆற்றலை முழுமையாக வெளிக்கொணர்ந்து, எந்தவொரு கடுமையான சூழலையும் எதிர்கொள்ளும் மன உறுதியையும் நிலையான வெற்றியையும் பெற்றிடலாம்.