குழந்தை இயற்கை மருத்துவம்!

குழந்தை இயற்கை மருத்துவம்!

ற்போது தனிக் குடித்தனங்கள் பெருகி விட்டதனால், அனுபவம் மிகுந்த பெரியவர்கள் வீட்டில் இல்லாத காரணத்தால் இளம் தாய்மார்கள்எது ஒன்று என்றாலும் பச்சிளங் குழந்தைகளை டாக்டரிடம் அழைத்துக் கொண்டு ஓடுவது இயல்பாகிவிட்டது. அதிகப்படியான மருந்துகள் பின்விளைவுகள் ஏற்படுத்தி குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் இயற்கையான வளர்ச்சியையும் பாதிக்கிறது.

கூடுமான வரை ஓரிரு நாட்கள் நாம் சமாளித்து,  முடியாத பட்சத்திலோ, ஆரம்பமே வியாதி அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தினாலோ டாக்டரிடம் போகலாம். நான் அனுபவ பூர்வமாகக் கண்ட கை வைத்தியத்தில் இயற்கையின் போக்காகப் பிள்ளைகளை வளர்த்ததனால் பயன் அடைந்த காரணத்தினால் வாசக் சகோதரிகளும் பின்பற்றட்டும் என்று இதை எழுதுகிறேன்.

1. காலையில் குழந்தை கண் விழித்தவுடன் நல்ல அக்மார்க் தேனை வாங்கி வைத்துக்கொண்டு, ஒரு சொட்டு நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு அற்புதமான இயற்கை அளித்த வரப்பிரசாதம். வசம்பு போடுவதனால் நாக்கு தடிந்து பேச்சு வராமல் இருக்காது. நாக்கு பிறண்டு சீக்கிரம் பேச்சு வரும்.

2. இரவில் விளக்கேற்றியவுடன் தினமும் சுட்ட வசம்பை கல்லில் உரைத்து ஒரு சங்குக் குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றித் தடவி, வெற்றிலையில் சிறிது எண்ணெய் தடவி விளக்கில் காட்டி வாட்டி. பொறுக்கும் சூட்டில் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்.

3. நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி அரிசி உலையில் போடும்போது போட்டு, வடிக்கும்போது எடுத்துவிட்டால் வெந்திருக்கும். அதை உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டால் குழந்தையைக் குளிப்பாட்டும்போது இரண்டு உரை உரைத்து, நாக்கில் தடவி வழித்தால், நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

4. சில குழந்தைகள் குடல் கொழுத்து, அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்ப ஈர்க்கு துளி,  அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டு பிழிந்து, வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி கப்பென்று நின்று விடும்.

5. அடிக்கடி மலம் போனால் சுடாத வசம்பை இரண்டு உரை உரைத்து ஊற்றினால் மலம் போவது நின்றுவிடும்.

6. குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலம் கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், விதையில்லாத உதிர்ந்த திராட்சைப் பழங்கள் நான்கை ஊற வைத்துக் கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்திற்கெல்லாம் மலம் போய்விடும்.

7. குழந்தைக்கு தலைக்கு ஊற்றியவுடன் சாம்பிராணியையும், கஸ்தூரி மஞ்சள் தூளையும் கலந்து புகைக் காட்ட வேண்டும். மருந்து கடைகளில் கஸ்தூரி மாத்திரை என்று கிடைக்கும். தலைக்கு ஊற்றியவுடன் அதை கால் மாத்திரை தாய்ப்பாலில் கரைத்து புகட்டினால் சளியேப் பிடிக்காது. மாதம் ஏற ஏற மாத்திரை அளவைக் கால்காலாகக் கூட்டிக் கொள்ளலாம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை.

8. குழந்தைகளுக்கு பேதிக்கு கொடுப்பது, எண்ணெய் தேய்ப்பது, காதில், மூக்கில், எண்ணெய் விடுவது எல்லாம் மிகவும் ஆபத்தான விஷயம்.

9. குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் விக்ஸ் போன்றவற்றைத் தேய்ப்பது கூடாது. பிஞ்சு சருமம் தாங்காது, தேங்காய் எண்ணெயையும் கற்பூரத்தையும் காய்ச்சி பொறுக்கும் சூட்டில் சிறிது தடவினாலே நல்ல குணம் தெரியும்.

10. தினமும் காலையும் மாலையும் இரண்டிரண்டு சங்கு சூடாக்கி ஆற வைத்த நீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வர வேண்டும்.

11. குழந்தை மலம் கழிக்கவில்லை என்பதற்காக மலங்கழிய உள்ளுக்கு மருந்து கொடுப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். ஆசன வாயில்
வெற்றிலைக் காம்போ, சோப்போ வைத்தாலே அவற்றிற்கு உந்துதல் ஏற்பட்டு மலம் கழிந்துவிடும்.

12. குழந்தையைக் குளிப்பாட்டாத நாட்களில் வென்னீரில் யுடிகோலோன் கலந்து, துடைத்து பவுடர் போட்டுச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com