
பிரிவில் வாடிய அவன்!
துயரை சேமிக்கும் இவள்!
இவர்களின் சந்திப்பு தற்செயல்தான்!
காலப் போக்கில் இருவரும் - நேச வயத்தில் அகப்பட்டவர்களாய்,
கூண்டில் வாழும் ஜோடிக் கிளிகளாய்,
ஒன்று சேரத் துடிக்கும் - பறவை
திமிங்கிலத்தின் வாஞ்சையுள்ளவர்களாய்,
எட்டா உயரத்தில் நீண்ட தூரம் பயணிக்க ஆசையுள்ளவர்களாய்!
தன் துயரைப் பகிர்ந்து கொள்ளும் - மன வைத்தியர்களாய்!
வாழும் இவர்களின் நிலைமையோ..!
வெள்ளத்தில் தத்தளிக்கும் துணையைப் பிரிந்த பறவையை போன்றது.
மீண்டும் சொந்த இடத்தை அடைய இயலா துயர்!
பிரிவொன்று நேர்ந்தது!
சூழ்நிலையாகிய வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இவர்களின் நிலையறிந்து,
நீர்களின் தலைவன், கதிரவனிடம் வரம் கேட்டு!
வெள்ளத்தை வற்ற செய்து
பிரிவை நீக்கி!
இணையைக் காணச் செய்த -
வருணனின் கருணை
எவ்வளவு அழகானது!