
மழை என்றாலே மண் தான் பிரதானமாக இருக்கும். டூ வீலர் பொறுத்தவரை அது வண்டியின் சங்கிலிக்குள் சிக்கிக் கொள்ளும். இதனால் வண்டி பாதி வழியிலேயே நின்று விட வாய்ப்புள்ளது. வண்டியின் செயினை சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
அதே போல் வண்டியில் உள்ள ஏர் ஃபில்டரையும் சரியாக பராமரிக்க வேண்டும்.மழைக்காலத்தில் காற்றில் அதிகமாக ஈரப்பதம் இருக்கும். இது ஃபில்டரில் தங்குவதால் அது கிழியும் வாய்ப்புள்ளது.இதன் காரணமாக வண்டியும் ஸ்மூத்தாகசெல்லாமல் அவ்வப்போது நின்று விட வாய்ப்புண்டு.
பிரேக், டயர் போன்றவற்றை சரிபார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். மழையால் நனைந்த, தண்ணீர் ஓடும் சாலையில் டூ வீலர் இயக்கினால் ,வண்டி ஸ்கிட்டாகும் வாய்ப்புள்ளது.
டிஸ்க் மற்றும் பிரேக் டிரம்களைசுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.டயர் தேய்ந்தால் அதை பயன்படுத்துவது சற்று ஆபத்துதான். பிரேக் பிடிக்கும் போது பிடிமானம் இல்லையெனில் சறுக்கி விட்டு விடும்.காற்று சரிபார்த்து, பெட்ரோல் சரிபார்த்து வைத்துக் கொள்வது அவசியம்.
சர்வீஸ் பண்ணி வாகனத்தை வைத்துக் கொள்ள ரிப்பேர் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வண்டி சார்ந்த ஆவணங்களை மழை, தண்ணீர் பட்டு விடாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மழை குறித்த வானிலை செய்திகளை பார்த்து விட்டு அதற்கேற்ப வெளியில் செல்வதை திட்டமிட பிரச்சனை வராது.
எப்போதும் ரெயின் கோட், வண்டி கவரை வைத்துக் கொள்ள நல்ல மழை சமயத்தில் கவரை போட்டு விடலாம். இதுமாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மழைக்காலத்தில் சிரமம் இருக்காது.
மழை நாட்களில் டூ வீலர் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.ஏனெனில் சாதாரண நாட்களிலேயே வழுக்கும் தரை, பள்ளமான சாலை என மேனேஜ் பண்ணிதான் வாகனத்தை இயக்க வேண்டியதிருக்கும். ஒரு மழை வந்து விட்டாலே ரோட்டில் தண்ணீர் நின்று பள்ளம்,மேடு தெரியாது. இது மாதிரி சமயங்களில் டூ வீலர், காரை வெளியே எடுக்காமல் பொது போக்குவரத்தையோ, தனியார் கேப்ஸையோ புக் பண்ணி செல்ல டென்ஷன் இருக்காது.