புத்துணர்வு தரும் புடலங்காய்!

புத்துணர்வு தரும் புடலங்காய்!

புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகியவை நிறைந்திருக்கின்றன.

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும். நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

புடலங்காய் இலைச் சாற்றை சிறிது எடுத்து நீருடன் கொத்தமல்லியையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை, தினமும் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை வராது. காய்ச்சலையும் குணபடுத்தும்.

புடலங்காய் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும்.

மூலநோய்க் உள்ளவர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.

இதய கோளாறு உள்ளவர்கள், புடலங்காய் இலையின் சாறு எடுத்து நாள்தோறும், 2 தேக்கரண்டி வீதம் வெறும் வயிற்றில், 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.

புடலங்காய் சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை புடலங்காயை பொரியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும்.

தலையில் உள்ள பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.

புடலங்காயில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுபடும்.

புடலங்காயின் வேரை கைப்பிடி அளவு எடுத்து, மையாக அரைத்து சில துளி அளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால், வயிற்றில் உள்ள பூச்சிககளை அழிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com