புட்டில் இத்தனை வெரைட்டி இருக்கா? வாங்க ஈஸியா செய்து அசத்தலாம்!

புட்டு
புட்டுIntel
Published on

பொதுவாகவே குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை என அனைவரின் ஃபேவரைட ஆன ஐட்டெம் தான் புட்டு. மேலும் பெண்களின் தினசரி சமையல் டென்ஷனுக்கும் இது தீர்வளிக்கும். புட்டு சீக்கிரம் செரிமானம் ஆக கூடிய ஒரு உணவாகும். அப்படிப்பட்ட புட்டு இலங்கை யாழ்ப்பாணம் மற்றும் கேரளாவில் தான் அதிக பிரபலம். என்னதான் புட்டு செய்தாலும், அதில் எப்படி வெரைட்டி செய்து அசத்தலாம் என யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு உதவலாம். வாங்க ஈஸியான இன்ஸ்டண்ட் புட்டு எப்படி செய்வது என பார்க்கலாம்.

1. அரிசி புட்டு:

இந்த புட்டு செய்வதற்கு பாரம்பரிய அரிசி வகைகள் அல்லது புழுங்கல் அரிசியை பயன்படுத்திக் கொள்ளலாம். அரிசியை இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து விட்டு, அரிசியை 10 நிமிடங்களுக்கு உலர விடுங்கள். அரிசி முழுமையாக உலர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அரிசி அதிகமாக ஈரத்தன்மையுடன் இருக்கக் கூடாது. இப்போது அரிசியை ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்து தேவையான அளவு ஏலக்காய் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும். இந்த பொடியை நேரடியாக ஆவியில் வைத்து வேக வைத்துக் கொள்ளலாம்.

உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டு சர்க்கரை அல்லது சர்க்கரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதில் நெய்யில் வறுத்த முந்திரி பருப்புகளை சேர்த்தால் புட்டு அட்டகாசமாக இருக்கும்.

2. அவல் புட்டு:

இந்த புட்டு செய்வதற்கு உங்களுக்கு விருப்பமான எந்த அவலையும் பயன்படுத்தலாம். வெறும கடாயில் அவல் மற்றும் ஏலக்காய் சேர்த்து வாசனை வரும் வரை 5 நிமிடங்களுக்கு வறுக்கவும்.

அவல் ஆறிய பிறகு, இதனை நன்கு பொடித்து கொள்ளவும். தயாராக உள்ள மாவில் தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்திற்கு மாவை தயார் செய்யவும். இதை இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரில் 8-10 நிமிடங்கள் வேக வைத்து கொள்ளவும். வெந்த புட்டில் தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரை சேர்த்து பரிமாறலாம். நீங்கள் விரும்பினால் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சுவை இன்னும் அதிகமாக இருக்கும்

3. கோதுமை புட்டு:

கோதுமை மாவை வெறும் கடாயில் சேர்த்து வாசனை வரும் வரை 10 நிமிடங்களுக்கு வறுக்க வேண்டும். குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் வறுக்கவும். வறுத்த கோதுமை மாவில் தண்ணீர் தெளித்து ஆவியில் வேகவைத்து கொள்ளவும். நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல், நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து பரிமாறலாம்.

இதில் இனிப்பு சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள், புட்டு மாவை அரைக்கும் பொழுது ஏலக்காயை சேர்க்க வேண்டாம். எப்போதும் போல புட்டு மாவை ஆவியில் வேகவைத்து எடுத்து கடலை கறியுடன் பரிமாறலாம். புட்டு மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com