ராமர் சேது பாலம்: உண்மையிலேயே ராமர் கட்டியதா?

கடலில் மிதக்கும் கற்கள்... கோடிகளில் மதிப்புள்ள மணல்... கொட்டிக்கிடக்கும் தோரியம்!
Mythical bridge and modern industry blend
Mythical bridge and modern industry blendImg credit: AI Image
Updated on
MM strip
MM strip

ராமர் சேது (Ram Setu) மற்றும் ஆதாம் பாலம் (Adam’s Bridge) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் தீவு தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலை மன்னார் தீவுக்கும் இடையே அமைந்துள்ள 48 கி.மீ. நீளமுள்ள சுண்ணாம்புக்கல் திட்டுக்களின் (limestone shoals) சங்கிலித் தொடர் ஆகும். இது இயற்கையான மணல் திட்டுகளால் ஆனாலும், ராமாயணத்தில் ராமர் கட்டிய பாலம் என இந்துக்களால் போற்றப்படுகிறது. இது மன்னார் வளைகுடாவை பால்க் நீரிணையிலிருந்து பிரிக்கிறது.

இராமாயணத்தின்படி, ராமர் இலங்கைக்குச் சென்று சீதையை மீட்க, நளன் மற்றும் வானர சேனாவால் கட்டப்பட்ட பாலம் மிதக்கும் கற்களைப் பயன்படுத்தி இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. அதில் ராமரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது எனவும் அதனால் அது மூழ்காது எனவும், கிமு 7 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், ராமர் சேது பாலம் கட்டப்பட்டது என்றும் நம்பப்படுகிறது.

ஆதாம் பாலம் ஆபிரகாமிய மதங்களின் நம்பிக்கையின்படி, ஆதாம் இலங்கையில் உள்ள ஆதாம் மலைக்கு (Adam's Peak) செல்ல இந்த பாலத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த ஆதாம் பாலமானது மன்னார் வளைகுடாவையும் பாக் ஜலசந்தியையும் பிரிக்கிறது. இவற்றுள் சில மணல் திட்டுகள் வறண்டு கிடக்கின்றன. மேலும் இந்த அமைப்பைச் சுற்றியுள்ள கடல் மூன்று அடி முதல் 30 அடி ஆழம் வரை ஆழமற்றதாக உள்ளது.

பல அறிவியல் அறிக்கைகளின்படி, பாலம் 1480ம் ஆண்டு வரை கடல் மட்டத்திலிருந்து முற்றிலும் மேலே இருந்தது. ஆனால் அந்தப் பகுதியைத் தாக்கிய சூறாவளியால் பாலம் சேதமடைந்தது. 15 ஆம் நூற்றாண்டு வரை, கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்ட இந்த பகுதியானது கால் நடை பாதையாகவே இருந்தது.

இதையும் படியுங்கள்:
அதிசயமான கின்னஸ் சாதனையாளர்கள் - மனித ஆற்றலுக்கு எல்லையே இல்லையா?
Mythical bridge and modern industry blend

இந்தியாவும், இலங்கையும் 14 ம் நூற்றாண்டு வரை ஒரே தரை தளமாக இருந்துள்ளது. 1480 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி இந்தியாவையும், இலங்கையையும் பிரித்து விட்டது. அப்போது தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரை 19 மணல் திட்டுகள் உருவாகின. இந்த மணல் திட்டுகள் நகரும் தன்மை கொண்டது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ காலங்களில் வீசும் காற்று மற்றும் கடலைகளால் சற்று மாறக்கூடிய தன்மை கொண்டது. இந்த மணல் திட்டுகள் மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் தான் இதனை ராமர் கட்டியதாக முன்னோர்கள் கூறி வந்தனர்.

இந்த பாலம் 7,000 ஆண்டுகள் பழமையானது என கடல்சார் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மன்னார் தீவு மற்றும் தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள கடற்கரைகளின் கார்பன் முறையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு இயற்கை உருவாக்கமாகும் (Natural bridge), இது மணல் திட்டுக்கள், பவளப்பாறைகள் மற்றும் சுண்ணாம்புக்கல் படிமங்களால் ஆனது. ராமேஸ்வரத்தில் உள்ள அரிச்சல் முனையில் இருந்து இந்த பாலத்தின் தொடக்கத்தைப் பார்க்கலாம்.

ராமர் சேது பாலம் 1964 வரை காணக்கூடியதாக இருந்தது. இருப்பினும், ராமர் சேது பாலம் தற்போது நீருக்கடியில் உள்ளது. ராமர் பாலம் சல்லடை போன்ற அமைப்பு உடையது இதனால் தான் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது தமிழகம் காப்பாற்றப்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இங்கு ஏற்படும் நீரோட்டங்களால் அணுசக்திக்கு தேவையான தோரியம் தாது நிறைந்த மணல் கிடைக்கிறது. ஒரு கிலோ தோரியத்தின் விலை கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அக்பர் பீர்பால் கதை - கவசத்தை விட தந்திரமே முக்கியம்!
Mythical bridge and modern industry blend

இந்தியாவின் நியூக்ளியர் தொழில்நுட்ப தந்தை ஹோமி பாபா, இந்தியாவில் யூரேனியம் இல்லை. தோரியம் கொட்டி கிடக்கிறது. (ராமர் பாலம் மணல்) இதைவைத்து 10-15 வருஷத்தில் ஒரு நியூக்ளியர் ரியாக்டர் (அணு உலை) செய்யலாம் என்றார். அதன் படி இந்தியா ஒரு அணு உலையை டிஸைன் செய்திருக்கிறது. ஆமாம்.. எந்த வெளிநாட்டு உபகரணங்கள், டெக், இல்லாமல் சொந்த டிஸைனில் உருவாக்கியதுதான் நியூக்ளியர் ப்ரீடர் யூனிட்.

இதற்கு தேவையான யுரேனியம் 1-2 சதம்தான் இந்தியாவிடம் இருக்கிறது. தோரியம் 25 சதம் அளவில்லாமல் கொட்டி கிடைக்கிறது. ஆனால் தோரியத்தை நேரடியாக நியூக்ளியர் ரியாக்டரில் உபயோகிக்க முடியாது. மூன்று ஸ்டேஜில் இதை உபயோகிக்கலாம். இதனால்தான் 1950 இல்.. ஹோமி பாபா, இதற்கான ப்ளூ ப்ரிண்டை வடிவமைத்தார்.

1. முதலில், யூரேனியத்தை ஹெவி வாட்டர் ரியாக்டரில் எரிப்பது. அதன் மூலம் கிடைப்பது ப்ளூட்டோனியம்.

2. இந்த ப்ளூட்டோனியத்தை ஃபாஸ்ட் ப்ரீடர் அணு உலையில் எரிக்கும்போது, அதிக ப்ளூட்டோனியத்தை உருவாக்கி, நம்மிடம் உள்ள தோரியத்தை உருமாற்றி, uranium-233 ஆக்கிவிடுகிறது.

3. தோரியத்தை நேராகவே அணு உலையில் எரிப்பது..இதில் இந்தியா இரண்டாவது ஸ்டேஜில் இருக்கிறது. இதற்கான செலவு ஜஸ்ட் 420 மில்லியன். ஆனால் 400 வருடத்திற்கான எரிபொருள் கிடைக்கும்.. இந்த புரட்சி நடந்தது கல்பாக்கம் அணு உலையில். இந்தியாவின் கல்பாக்கத்தில் உள்ள முன்மாதிரி அதிவேக ப்ரீடர் உலை (PFBR) வெற்றியடைந்து, ரஷ்யாவிற்கு அடுத்து வணிக ரீதியான வேகமான ப்ரீடர் உலைகளைக் கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. முத்தான இந்த சாதனையை தான் அன்மையில் பிரதமர் மோடி பாராட்டினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com