சிலநேரங்களில் சில மனிதர்கள்!

நாம் எங்கும் நிதானம், எதிலும் விவேகம், கடைபிடித்து நாம் நாமாக வாழ்வதே நிதர்சனமான உண்மை
peaceful life
peaceful life
Published on
mangayar malar strip
Mangayar malar

இறைவன் படைப்பில்தான் எத்தனை எத்தனை சூழ்ச்சிகுணங்கள்.

வஞ்சக எண்ணங்கள்.

முகத்திற்கு நேரே ஒரு பேச்சு.

முதுகிற்கு பின்னால் ஒரு பேச்சு. சிலருக்கு நம்மை மிகவும் பிடித்துப்போனால் நமது தவறுகூட தப்பாகத்தொியாது.

அதே நபருக்கு நம்மை பிடிக்காமல் போனால் நமது நோ்மைகூட தப்பாகவேதெரியுமே!

இப்படி மாறுபட்ட வேடங்களில் மனிதர்களுடன் நமது வாழ்க்கைப்பயணம் தொடர்கிறது.

இதை நினைத்துப்பாா்க்கும்போது ஒரு திரைப்படத்தின் பாடல் நினைவுக்கு வருகிறது.

"அதாவது "அடி என்னடி உலகம் அதில் எத்தனை கலகம்" "படாபட்"என வரும்.

அதுபோல எத்தனை இன்னல்களைத் தாண்டி நாம் பயணிக்க வேண்டியதாகிறது.

இறைவன் படைப்பில் பகல், இருட்டு, ரத்தம், பசி,தூக்கம், உணர்வு, சுவாசம் எல்லாம் பொதுவானதாகத்தான் உள்ளது.

அதில் வித்தியாசமே கிடையாது.

ஆனால் மனித மனங்களில் மட்டும் ஏன் இப்படி வித்தியாசங்கள் கலந்து வருகிறது.

இந்நிலை கண்டு மனம் வேதனைப்படுவதே மிச்சம்.

நாம் நமது நண்பருக்கோ அல்லது சொந்தங்களுக்கோ, ஏதாவது ஒரு வகையில் திடீரென பிரச்சனை வரும் நிலையில், நாமாகவே ஓடோடிச்சென்று உதவி செய்வோம், அது நமது மனதின் வெகுளித்தனமான செயல்பாடு.

அந்த எண்ணம் உள்ளவர்கள் யாரும் கெட்டுப்போவதில்லை.

நமது உதவியோ பிரதிபலன் எதிா்பாராத செயல்.

ஆனால் நமக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டால் நம்மால் செளகர்யம் பெற்றவர்கள் நம்மைத் திரும்பிக்கூட பாா்க்கமாட்டாா்கள்.

அதுதான் நயவஞ்சக மனது படைத்த சுயநல உலகமாகும்.

ஆக இந்த இடத்தில் நாம் முட்டாளாக ஆகிவிடுகிறோம்.

பதிலுக்கு

அவர்கள் புத்திசாலிகளாக ஆகி விடுகிறாா்கள்.

அப்படிப்பட்ட உலகத்தில் எப்படித்தான் வாழமுடியும்?

இது போன்ற செயல்களால் பாதிக்கப்படும் நமக்கு கோபம் தான் மேலோட்டமாக வந்து விடுகிறது.

அதே நேரம் ஆத்திரமும் வருகிறது.

நாம் யாருக்கு உதவி செய்தாலும் நமக்கு ஏற்படும் இக்கட்டான சூழலில் யாரும் உதவிசெய்ய முன் வருவதில்லை.

அதேபோல யாருக்கு உண்மையாக இருந்தாலும் முடிவில் ஏமாற்றப்படுபவரும் நாமாகத்தான் இருப்போம்.

இதுதான் உண்மை.

நாம் யாருக்கு நல்லதே நடக்க வேண்டுமென்று நினைத்தாலும் நமக்கு நல்லது நடக்கப்போவதில்லை.

நன்றி கெட்ட இவ்வுலகில் நன்றி கெட்டவர்களிடம் நன்றியை எதிா்பாா்ப்பது நமது தவறு.

ஆக இனிப்போ, கசப்போ, அளவோடு எடுத்துக்கொள்வதே சிறப்பு.

நாம் நமது குடும்பம் நமக்கென நல்லவர்களான மனசாட்சியுள்ள நபர்களிடம் பழகலாம்.

அதிலும் எல்லை மாறாமல் பழகலாம்.

நமக்கானதை நமது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் இறைவனின் ஆசியோடு நம்மை வந்து சேரும்.

ஆக நாம் எங்கும் நிதானம், எதிலும் விவேகம், கடைபிடித்து நாம் நாமாக வாழ்வதே நிதர்சனமான உண்மை.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையின் தாரக மந்திரம்: உண்மை, நேர்மை, உழைப்பு, விடாமுயற்சி!
peaceful life

நாம் நாமக்காகவே வாழ்வதும் கூடுதல் சிறப்புதான். அதற்காக உதவியே செய்ய வேண்டாம் என்ற கருத்து கிடையாது. பாத்திரமறிந்தே பிச்சை போடவேண்டும். அது அனைவருக்குமே நல்லது.

எனவே நாம் எப்போதும் நிதானத்துடன் வாழ்வதே சிறப்பானது. நல்லவர்களும் வாழ்வதுண்டு. அதுவே நான்கு மறைதீா்ப்பாகும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com