லட்சங்களில் சம்பளம்... அனாதையாகும் பெற்றோர்! அப்போ தாய் மண்…?

youngster and parent
youngster and parentImg credit: AI Image
Updated on
MM strip
MM strip

"திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு..." என்றார் மீசைக்கார பாரதி.

அன்றைய காலத்தில் அது நேர்மறை கருத்தாக இருந்தது. இங்கே பிரிட்டிஷ் ஆட்சி. வேலை இல்லாமல் கோடி கணக்கில் மக்கள் இருந்தனர். ஆதலால் தான் முண்டாசு கவிஞன் சொன்னான்.

இன்று நிலை என்ன…?

உலகமயமாக்கல், தாராளவாதம் ஆகிய காரணங்களால் இளைஞர்கள் வேலைக்கு செல்கிறார்கள். நல்ல சம்பளம். நல்ல வாழ்க்கை. ஆதலால் தாய், தந்தை மற்றும் உறவுகளை விட்டு விமானத்தில் பறக்கிறார்கள்.

நாம் படித்தது நம் தாய் மண்ணில் தான். தாய் மண்ணை மறப்பது நல்லது அல்ல. தாய் தந்தை உறவுகளை விட்டு, அந்நிய நாட்டிற்கு செல்கிறார்கள். தாயும், தந்தையும் அனாதைகளாக ஆக்கி விட்டு பறப்பது எப்படி நியாயம் ஆகும்…?

“தாயில் சிறந்த கோவிலும் இல்லை… ! தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை… ! “

இதை எப்படி இளைஞர்களுக்கு புரிய வைப்பது… ? இருக்கவே இருக்கிறது 'முதியோர் இல்லம்'. ஆம்.!. இதற்கு தான் தாய் தந்தை நம்மை வளர்த்தார்களா…?

கை செலவுக்கு பணம் அனுப்பி விடுகிறார்கள். தாய் தந்தை இதையா விரும்புகிறார்கள்…?

ஐ. டி. தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. ஏ. ஐ. (செயற்கை நுண்ணறிவு) வந்து விட்டது.

வெளிநாடுகளில் ஐ. டி படித்தவர்களுக்கு நல்ல கிராக்கி. சொந்த தாய் மண் மறந்து அந்நிய நாட்டில் போய் செட்டில் ஆகி விடுகிறார்கள்.

அவர்கள் அந்நிய கலாச்சாரம்… அதையும் விட்டு விட வில்லை. தாய் மண் மறக்க பட்டாலும், தாய் தந்தையை தூக்கி எறிவதா…? இது பற்றிய சிந்தனையே இல்லை.. லட்சக்கணக்கில் சம்பளம் மட்டுமே அவர்கள் கண்ணுக்கு தெரிகிறது.

இதையும் படியுங்கள்:
கலர் கலரா சோப்பு... அதன் நுரை மட்டும் எப்போதும் வெளுப்பு... அது எப்படி?
youngster and parent

நம்மை மிக கஷ்டப்பட்டு வளர்த்தவர்கள். நமக்காக வாழ்ந்தவர்கள். தங்கள் சந்தோஷங்களை கூட தியாகம் செய்து, படாத பாடு பட்டவர்கள். நமக்கு கல்வி கொடுத்தது யார்? வாயை கட்டி வயித்தை கட்டி மூணு வேளை சோறு போட்டது யார்? இதை மறப்பது நல்லது இல்லை.

கல்யாணம் செய்து கொண்டு அந்நிய நாட்டிற்கு மீண்டும் சென்று விடுகிறார்கள். அவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது தாயும் தந்தையுமே…!

தாய்- தந்தையை மறந்து விட்டு வெளி நாடுகளில் வாழ்வது பக்கா சுயநலம். முதியோர் இல்லம் இப்படி அதிகமாகி வருவதற்கு காரணம் அயல்நாடு செல்லும் இளைஞர்கள் தான்.

ஏங்கே போச்சு மனிதாபிமானம்… ?

இது தான் இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை. சொல்லவே வாய் கூசுகிறது. அம்மா அப்பாவை தவிக்க வைத்து விட்டு தங்கள் சந்தோஷம் ஒன்றையே முக்கியமாக கருதுவது…கீழ்தரமானது.

இதையும் படியுங்கள்:
காதல் கத்தரிக்காய்க்கு மகுட மாம்பழத்தை இழந்த இங்கிலாந்து மன்னர்!
youngster and parent

நாம் படித்த கல்லூரி, பேராசிரியர் சம்பளம், டேபிள் மற்றும் நாற்காலி, நோட்டு புத்தகம் கொடுத்தது யார்…?

நம் தொழிலாளர்கள் தான் கல்லூரிகளை கட்டியது.

நமக்கு சொல்லி கொடுத்தது நமது பேராசிரியர்கள் தான்.

மக்களின் வரி பணத்தில் தான் கல்லூரிகள் நடக்கின்றது.

பேராசிரியர் சம்பளமும் மக்கள் தான் கொடுக்கிறார்கள்.

இதை எல்லாம் நினைத்து கூட பார்ப்பது இல்லை. இது முழுக்க சுயநலமே…!

மக்கள் பணத்தில் படித்து விட்டு அந்நியனுக்கு வேலை செய்வது துரோகம்.

ஆம்..

தாய் மண்ணிற்கு செய்யும் துரோகம் தான்.

ஆமாம்….

தயவுசெய்து…

மறக்காதீர்கள்…

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com