அதிக பெண் காவலர்கள்! குறையும் குற்றங்கள்!

இந்தியா மற்றும் தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்களின் எண்ணிக்கை மற்றும் தலைமைப் பொறுப்புகளில் அவர்களின் பங்கு குறித்த விரிவான ஆய்வு மற்றும் முக்கியத் தகவல்கள்.
பெண் காவலர்கள் | Women police officers
பெண் காவலர்கள் | Women police officersAI Image
Updated on
MM strip
MM strip

இந்தியாவில் மொத்த காவல்துறையில் பெண் காவலர்களின் எண்ணிக்கை சுமார் 2.4 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இது நாட்டின் மொத்த காவல் துறையில் சுமார் 11% முதல் 12% வரையிலான விகிதமாகும். இருப்பினும், காவல்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 33% ஆக உயர்த்த மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்தியாவில் பெண் காவலர்களின் எண்ணிக்கை உத்தரப் பிரதேசம் (33, 319), மகாராஷ்டிரம் (32,172), தமிழகம் (25, 334), பீகார் (24, 295), அஸ்ஸாம் (19, 299) என உள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்த பெண் பணியாளர்களில் பெரும்பான்மையானவர்கள் சுமார் 2.17 லட்சம் (சுமார் 90%) கான்ஸ்டபிள் போன்ற அடிநிலை பணிகளில் மட்டுமே உள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறையில் மட்டும் சுமார் 35, 000-க்கும் அதிகமான பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். தேசிய சராசரியாக 11% பெண் காவலர்கள் உள்ளனர். தமிழ்நாடு காவல்துறையில் 2025-2026 ஆம் ஆண்டு அரசாங்க கொள்கை விளக்கக் குறிப்பு தரவுகளின்படி, பெண் காவலர்களின் மொத்த எண்ணிக்கை 26,589 ஆகும்.

மாநில அளவில் ஒப்பிடுகையில், தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் சுமார் 21% பங்களிப்பைக் கொண்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் 43% பெண் அதிகாரிகள் தலைமைப் பொறுப்பில் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் 244 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இது இந்தியாவிலேயே மிக அதிகம். ஒவ்வொரு வட்டார காவல் நிலையத்திலும் குறைந்தபட்சம் 1 பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 3 பெண் தலைமைக்காவலர்கள் பணியாற்றுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
அஸ்ஸாம் ஹர்கிலா படையைப் பற்றித் தெரியுமா?
பெண் காவலர்கள் | Women police officers

இந்திய அளவில் சமீபத்திய இந்திய நீதி அறிக்கை (2025) தகவலின்படி, நாடு முழுவதும் உள்ள 2.4 லட்சம் பெண் காவலர்களில் பெரும்பாலானோர் அடிமட்டப் பதவிகளிலேயே உள்ளனர். பெண் கான்ஸ்டபிள் நிலையில் 88% - 90% அதிகாரிகள் 24, 322. 8% - 10% உயர் அதிகாரிகள் 960 அதிகாரிகள்~ 12% (IPS பிரிவில் மட்டும். மத்திய அரசுப் படைகளில் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில், CRPF மற்றும் CISF ஆகிய படைகளில் கான்ஸ்டபிள் பணிகளின் ஆய்வு ஒன்றில், காவல் துறையில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு, ஆண், பெண் அதிகாரிகளுக்கு சாத்தியமான முறையில் ஒரே நேரத்தில் பயிற்சி அளித்தல், அதிக எண்ணிக்கையில் பெண் கவாத்து பயிற்சியாளர்களை நியமித்தல் உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாநாடு நிறைவு விழா சமீபத்தில் நடந்தது.

பெண் காவலர்கள் | Women police officers
பெண் காவலர்கள் | Women police officersAI Image

இவை நடைமுறைக்கு வந்தால் பெண்களுக்கு எதிரானக் குற்றங்கள் வெகுவாகக் குறையும் என திடமாக நம்பலாம்.

தமிழகத்தில், சட்டம்- ஒழுங்கு, குற்றப் பிரிவு, போக்குவரத்து காவல் நிலையங்களில் 43 சதவீதம் பெண் காவல் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இது மற்ற மாநிலங்களைவிட அதிகம். எனினும் இன்றும் காவல்துறையின் உயரிய பதவிகளில் பெண்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் உள்ளனர். இது போன்ற உயர் பதவிகளில் பெண்களுக்கு அதிக அளவில் முன்னுரிமை அளிக்கப்படுவதே பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும்.

பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றச் செயல்களைக் கையாள்வதில் பெண் காவல் அதிகாரிகளின் பங்களிப்பு மற்றும் செயல்பாடுகள் எத்தகையதாக இருக்கிறது என்பது குறித்த ஒரு விரிவான ஆய்வைச் சென்னை ஐ.ஐ.டி தலைமையின் கீழ் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து கூட்டாக நடத்தின.

இந்த ஆய்வறிக்கையின்படி, பெண் போலீஸ் அதிகாரிகள் தங்களது அக்கறையான அணுகுமுறையின் மூலமாகக் காவல் துறையின் நிறுவன கலாசாரத்தில் சாதகமான மற்றும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கோவிலுக்கு சென்று திரும்பி வரும் போது நம்மிடம் மாற்றம் ஏற்படுகிறதா?
பெண் காவலர்கள் | Women police officers

காவல் துறையில் பெண் அதிகாரிகளின் பங்களிப்பை அதிகரிப்பதானது, பாலின அடிப்படையிலான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிறுவன ரீதியான செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களிடையே அதிக நம்பிக்கையை வளர்ப்பதன் மூலமாக, அவர்கள் காவல் துறையிடம் புகாரளிக்கும் விகிதத்தை அதிகரிக்க இது பெரும் ஊக்கமளிக்கிறது என்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். இதோடு மட்டுமன்றி, பெண் போலீஸ் அதிகாரிகள் தங்களின் பரிவு மற்றும் அக்கறையுடனான அணுகுமுறையின் வழியாகக் காவல் துறையின் நிறுவன கலாசாரத்தில் மிகச் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தமிழ்நாடு அரசு புதிதாக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை' உருவாக்கியுள்ளது. இந்த அதிரடிப்படை, பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஐடி பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதையும், கண்காணிப்பதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் தகவல்களை அறிந்துகொள்வதன் மூலம், சமூக மாற்றத்திலும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் பெண் அதிகாரிகள் எவ்வாறு ஒரு புதிய நம்பிக்கையையும், நேர்மறையான கலாசாரத்தையும் உருவாக்குகிறார்கள் என்பதை வாசகர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com