தயிரில் சர்க்கரை போட்டு சாப்பிடுவது எதற்காக?

Science Behind Eating Curd with Sugar
Science Behind Eating Curd with Sugar
அகிலா சிவராமன்

வணக்கம், நான் சென்னையில் பிறந்து வளரந்தேன். 1995 ஆம் ஆண்டு திருமணத்திறகுப் பிறகு நான் ஜம்ஷேட்பூரில் settle ஆகி விட்டேன். நான் கடவுள்களின் பெயரில் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் தான் எனக்கு எழுதும் ஆர்வம் வந்தது. நான் முதன் முதலாக எழுதிய கதை, புயலின் மறுபக்கம் கல்கியின் மங்கையர் மலரில் 04.01.2025 அன்று வெளி வந்தது. கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதன்முதலாக எழுத சந்தர்ப்பம் கொடுத்த கல்கி குழுவினருக்கும், எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும உங்களின் மனதை கவரும் வகையில் எழுத முயற்சி செய்வேன்.

Updated on

வட மாநிலங்களில் சுப காரியத்திற்குச் செல்லும் போதோ அல்லது பரீட்சை எழுதச் செல்லும் போதோ தயிரில் சர்க்கரை போட்டுச் சாப்பிடுவது எதற்காக?

நம் இந்தியாவில் இன்றளவும் பலவிதமான கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்தந்த மாநிலத்தின் வாழ்வியலுக்கு ஏற்றவாறு அவை கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக, நம் தமிழ்நாட்டில் முக்கியமான வேலைக்கோ அல்லது சுபகாரியத்திற்கோ செல்வதற்கு முன்னால் 'சகுனம்' பார்ப்பது வழக்கம். நாம் கிளம்பும் நேரத்தில் பூனை குறுக்கே வந்துவிட்டால், உள்ளே சென்று தண்ணீர் அருந்திவிட்டு சிறிது நேரம் கழித்துச் செல்வோம். இது போன்ற நம்பிக்கைகள் இன்னும் நிறைய இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
இருளை வென்ற சதுரங்க ராணிகள்: இந்திய 'பிரெயில் செஸ்' வீராங்கனைகளின் வரலாற்றுச் சாதனை!
Science Behind Eating Curd with Sugar

அந்த வகையில், வட மாநிலங்களில் சுபகாரியத்திற்கோ அல்லது பரீட்சை எழுதச் செல்லும் போதோ தயிரில் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடும் வழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள். இது காலம் காலமாகத் தொடர்ந்து வரும் ஒரு அழகான நம்பிக்கையாகும். தேர்வு எழுதச் செல்லும் மாணவர் முதல் முக்கியமான வேலைக்குச் செல்பவர் வரை பலரும் இதை இன்றளவும் கடைபிடிக்கின்றனர். இதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வோமா?

ஆன்மீக ரீதியான காரணங்கள்:

ஆன்மீக ரீதியாகப் பார்த்தால், பல பரிகாரங்களில் தயிர் பயன்படுத்தப்படுகிறது.

  • சுக்கிர பகவான்: தயிர் சுக்கிர பகவானின் காரணியாகத் திகழ்கிறது. சுக்கிரனின் செல்வாக்கினால் ஒருவருக்கு மகிழ்ச்சி, செல்வம் மற்றும் அனைத்து சுகங்களும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

  • வெற்றி நிச்சயம்: தயிரில் சர்க்கரை சேர்க்கும்போது சுக்கிர கிரகத்தின் பலன்கள் மேலும் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

  • மங்கலப் பொருள்: தயிர் ஒரு மங்கலப் பொருளாகவும், தூய்மையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. எனவே, புதிய முயற்சிகளில் தடைகள் விலகி வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பொய் சொல்பவர்களைக் காட்டிக் கொடுக்கும் கண்களின் ரகசியம்!
Science Behind Eating Curd with Sugar

அறிவியல் ரீதியான காரணங்கள்:

இதையே அறிவியல் ரீதியாகப் பார்த்தால், இதில் பல ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்துள்ளன:

  1. உடல் குளிர்ச்சி: தயிர் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் மிகச்சிறந்த உணவாகும். பரீட்சைக்கோ அல்லது நேர்காணலுக்கோ (Interview) செல்லும் போது ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவும், பதற்றமில்லாமல் நிதானமாகச் செயல்படவும் இது உதவுகிறது.

  2. உடனடி ஆற்றல்: சர்க்கரையில் உள்ள குளுக்கோஸ் மூளைக்கு உடனடி ஆற்றலைத் தந்து, நீண்ட நேரத்திற்குத் தேவையான புத்துணர்ச்சியை வழங்குகிறது.

  3. சோர்வு நீங்குதல்: தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் (Probiotics) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடல் சோர்வை நீக்கவும் உதவுகின்றன.

ஒரு கிண்ணம் தயிரும், ஒரு ஸ்பூன் சர்க்கரையும் இத்தனை நன்மைகளைத் தன்னுள் கொண்டுள்ளன. நாமும் அடுத்த முறை ஒரு நல்ல காரியத்திற்குச் செல்லும் போது இதனை முயற்சி செய்து பார்ப்போம்!

logo
Kalki Online
kalkionline.com