முத்த மழை இன்று கொட்டி தீராதோ!

முத்தம் காதல் வாழ்வின் முதல் முத்திரை... முத்தம் தரும்போது முகத்தின் 34 தசைகளும் மொத்த உடம்பில் 104 தசைகளும் இயங்கும்.
Trisha and Chinmayi - Muththa Mazhai Song
Trisha and Chinmayi - Muththa Mazhai Song
Published on

காதலில் முத்தம் முதல் வரவாகும். முத்தத்தை பற்றிய அறிவியல் Philematology எனப்படும். முத்தத்தின் அறிவியல் பெயர் Osculation. முத்தவியல் துறையினர் Osculatologist ஆவர். முத்தம் தரும்போது முகத்தின் 34 தசைகளும் மொத்த உடம்பில் 104 தசைகளும் இயங்கும்.

முதல் வரவு

முத்தம் காதல் வாழ்வின் முதல் முத்திரை ஆகும். மேல்நாட்டில் நடந்த ஆய்வில் 90% பெண்கள் தங்கள் இணையோடு இணைந்து இருக்கும் போது முத்தத்தையே முதல் வரவாக எதிர்பார்க்கின்றனர். ஆனால் ஆண்களில் 50% பேர் மட்டுமே முத்தம் கொடுத்தனர். முத்தம் தராத காரணத்தினால் 59% ஆண்களும் 66% பெண்களும் தங்கள் காதலை முறித்தனர்.

முத்தம் தரும் சுகமும் சுவையும்

முத்தம் மூளையிலிருந்து சுரக்கும் மகிழ்ச்சி சுரப்புகளை (பிளஷர் ஹார்மோன்ஸ்) சுரக்கச் செய்கின்றது. செரோடோனின், ஆக்சிடோஸின் மற்றும் டோப்போமின் ஆகிய சுரப்புகள் அப்போது சுரக்கின்றன. இதனால் மனதுக்குள் ஒரு கிளர்ச்சியும் போதையும் தோன்றுகின்றது.

வள்ளுவர்,

பாலோடு தேன் கலந்தற்றே பனிமொழிதன்

வால்எயிறு ஊறிய நீர்

என்று வாயோடு வாய் வைத்து முத்தம் தரும்போது சுரக்கும் ஹார்மோனின் சுவை, தேனும் பாலும் கலந்த தித்திப்பு உடையது என்றார்.

முத்தங்களின் வகை

மானுடவியலார் முத்தத்தை பிளாட்டானிக், ரொமான்டிக் என்று பிரிப்பர்.

Platonic kiss தாய், குழந்தை, சகோதரர், நண்பர்களுக்கிடையே பரிமாறப்படும் அன்பு முத்தமாகும். இவ்வகை முத்தத்தை நெற்றி, கன்னம், உள்ளங்கை ஆகியவற்றில் கொடுப்பர்.

ரொமான்டிக் முத்தம் காதல் முத்தமாகும். இந்த முத்தத்தை அவர்கள் உடம்பின் எந்தப் பகுதியிலும் கொடுக்கலாம். (வியட்நாமியர், சீனர், ஜப்பானியர், எஸ்கிமோக்கள் போன்றோர் மூக்குடன் மூக்கு உரசி முத்தம் கொடுப்பர்.)

கண்ணை மூடுவது ஏன்?

முத்தம் கொடுக்கும்போது பெண்கள் அண்ணாந்து இருப்பது ஆண்களின் உயரத்தினால் மட்டுமல்ல. அவர்கள் தலையை வலது புறமாக சாய்த்துக் கொள்வதற்கும் கண்களை மூடி கொள்வதற்கும் சில அறிவியல் காரணங்கள் உண்டு. பாலூட்டும் தாய்மார் பெரும்பாலும் இடது பக்கமே வைத்து குழந்தைகளுக்குப் பாலூட்டுவதால் ஆரம்பத்திலிருந்து தலையை வலது புறமாக திருப்பிப் பழகிவிட்டனர். எனவே முத்தமிடுவோர் தன் முகத்துக்கு அருகில் மற்றொரு முகம் வந்ததும் தன்னிச்சையாகவே தலையை வலது புறம் திருப்புகின்றனர். முத்தத்தின் போது ஏற்படும் கிளர்ச்சியால் கண்ணுக்குள் கண்மணி விரிவடைகிறது. இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் வெப்பம் பரவுகின்றது. பெண்களால் கண்களைத் திறக்க முடியவில்லை. மூடிய கண்களின் மீதும் இன்னொரு முத்தம் உபரியாகக் கிடைக்கும்.

மென் முத்தம்

கவிஞர் முத்தமிழ் விரும்பியின் காதல் கவிதைகளில் மென் முத்தம், நெகிழி முத்தம், மறு முத்தம், வார்த்தை முத்தம், வாய் அமுதம், தவிர்க்கப்பட்ட முத்தம், சத்தம் போடாமல் தரும் முத்தம் என்ற பலவிதமான முத்தங்களை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

காற்றை சூடாக்குகிறது/

முன் பகல் வெயில்/

இந்த மென்காற்றில்/ கரைகின்றன

நெகிழி முத்தங்கள் என்பார்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளை தொடக் கூடாதா? முத்தமிடக் கூடாதா?
Trisha and Chinmayi - Muththa Mazhai Song

நெகிழி என்றால் பிளாஸ்டிக். வெயில் காலத்தில் வீசும் மென்மையான காற்றில் இளகிய முத்தம் நெகிழி முத்தம் ஆகும் .

ஜான் கீட்ஸ்

Now a soft kiss, Aye

By that kiss

I vow an eternal bliss

இப்போதைக்கு ஒரு மென் முத்தம் தா அதுவே எனக்கு நிரந்தர இன்பம் என்றார் தத்துவக் கவிஞர் ரூமி

I like to kiss you

The price of kissing you is your life

உன் வாழ்க்கை தான் எனது முத்தத்திற்கான விலை என்கிறார். முத்தம் இருவரையும் வாழ்க்கை பாதையில் ஒன்றிணைக்கின்றது.

வார்த்தை முத்தம்

முத்தமிழ் விரும்பி, காதலியின் ஒரு சொல் ஒரு முத்தத்துக்குசமம் என்கிறார்.

தனித்த பொழுதுகள்

எரிக்கின்றன

எரிக்கும் நினைவுகள்

துணையாய்

பிரிக்கும் இழைகள் காணும் நேரம்

வரம் அல்ல

வார்த்தை முத்தம் தா.

ஒரு காதலன் காதலியிடம் இதழ் முத்தம் வேண்டாம் இணைந்திருப்போம் வா என்கிறான்.

இற்றைக் கனத்தின்

இடர்களைய

வாயமுதமல்ல கண்ணே வாழ்வமுதம் தா

என்கிறான்.

பாரதிதாசன் முத்தத்தின் நீளத்தை

அத்தான், தன் கையால்

அள்ளி, நிறை வாயின் அமுது கேட்டுக் கனிஇதழ்

நெடிதுறிஞ்சி என்கிறார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; தேவை ஒரு முத்தம்!
Trisha and Chinmayi - Muththa Mazhai Song

கடைசி முத்தம்

ஜான் கீட்ஸ் உன்னுடைய கடைசி முத்தம் தான் உலகிலேயே அதிக இனிமையானது

You are always new

The last of your kisses

Was ever the sweetest

என்கிறார்.

முத்தத்தின் இத்தகைய சிறப்புகளால் தான் திரையிசை கவிஞர்கள் 'இதழே இதழே தேன் வேண்டும்' என்றும் 'முத்த மழை கொட்டி தீராதோ' என்றும் பாடுகின்றனர்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com