'மனதில் உறுதி வேண்டும்' என்றாயே பாரதி...!
மகாகவி பாரதியாா் எட்டயபுரம் தந்த தவப்புதல்வன், புரட்சியாளன், கவிஞன், மதநல்லிணக்கம் விரும்பிய வித்தகன், பெண் விடுதலை கான போராடிய போா்வாள், சாதி ஒழிக்கப்பிறந்த சக்ரவர்த்தித்திருமகன்(1882-1921) அவர்தம் நினைவு நாளாம் செப்டம்பர் திங்கள் பதினொன்றில் அவன் கொள்கையை கடைபிடித்து வாழ்வோம்!
பாரதி ஒரு காவியம்
மனதில் உறுதி வேண்டுமென்றாயே பாரதி.
வாக்கினிலே இனிமை கொள்ளவைத்தாயோ!
முண்டாசுக்கவிஞனே, முழுநிலவே,
புரட்சியின் மூலதனமே.
அகவை முப்பத்தி ஒன்பதிற்குள் வரலாறு படைத்த பகலவனே.
மரணமல்லவா தழுவிவிட்டாய்.
நான் வீழ்வேனென நினைத்தாயோஎன்றவனே.
காலனை எட்டி உதைத்தாயோ? கவியமுதே!
கவிக்குயிலே, காா்மேகமே,
காந்தத்துகளான கவிஞனே,
புதுமை படைத்திட்ட புரட்சிப்புயலே.
விடுதலை போராட்ட விதையே!
பெண்விடுதலை விரும்பிய வியாதரனே! விருட்சமே.
கடினமாய் கவிபாடிய கவித்திறனே!
எழுத்தில் புரட்சியை விதைத்திட்ட வித்தகனே!
தேசியம் காத்திட்ட தேசியக்கவியே!
சமுதாயம் காத்திட்ட சக்திதாசனே
வெள்ளிப்பனிமலையின் மீதுலாவினாய்.
மேலைக்கடல்முழுவதும் கப்பல் விடக்கேட்ட கேள்வியின் நாயகனே!
பள்ளித்தலமனைத்தும் கோவில் கட்டக்கேட்ட கோமேதகமே!
தமிழுக்கே உரைநடைதந்த தகைசால் விருதே!
பெண்விடுதலை விரும்பிய விலாசமே!
சாதிகள் இல்லையடி பாப்பா என சத்தமாய்பாடிய சரித்திரமே!
சாதிமறுப்பு கொள்கையின் குறுந்தொகையே!
பாஞ்சாலி சபதம் தந்த பன்வளவனே!
எத்தனை எத்தனை பாடல் படைத்தாய் அத்தனையும்
வரலாறுதானே!.
கானிநிலம் வேண்டும் பராசக்தியே நீ கேட்ட கானிநிலம் காணாமல் போயிற்றே!
விளை நிலங்கள் வீடுவாசலாயிற்றே!
நல்லதோா் வீணை செய்தே நலங்கெட புழுதியில் எறிந்திட்டோம்!
பாரதி நெஞ்சில் உரமுமின்றி நோ்மைத்திறனுமின்றி வஞ்சனை
செய்யும் வாய்ச்சொல் வீரர்கள் மத்தியில் விசாலமாய்
விலாசமில்லாமல் விசனமாய் வாழ்கிறோமே!
பாரதி நீகண்ட புதுமைப்பெண் பாலியலால் பலியாகிறாள்!
அதைத்தடுக்க, சமுதாய அவலம் அவலாய்கறைய நீ திரும்பி வா!
பாரதி திரும்பவும் வா!
காக்கைக்குருவிகளும் காத்திருக்கும் புவியினில் புதுமை
படைத்திட புறப்பட்டுவா!