செண்பகமே! செண்பகமே!

செண்பக மரம்...
செண்பக மரம்...

ரண்டு செண்பக மரங்களை வீட்டில் வளர்த்தால் சொர்க்கத்தைக் காணலாம் என்று பிரம்மா கூறியதாக புராணங்கள் கூறுகின்றன. பெரும்பாலான சிவ தலங்களிலும், விஷ்ணு தலங்களிலும்,
செண்பக மரமே தல விருட்சமாக இருக்கும்.

செண்பக மரம் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மரத்தின் இலைகள் நீண்டு வளர்ந்து, மேற்புறம் பசுமையாகவும், கீழ்புறம் உரோமங்கள் மண்டி கிடப்பதாலும் காற்றில் உள்ள தூசுகளை அகற்றும் தன்மையைக் கொண்டுள்ளன. மஞ்சள் நிறத்தில் உள்ள மலர்களின் வாசனை காற்றோடு கலந்து சுற்றுப்புறத்தை மிக ரம்மியமாக வைக்க உதவுகிறது. செண்பக மரங்கள் செழிப்பான தன்மையைக் கொண்டுள்ளன. இவை அழகுக்காக பூங்காவிலும், தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றன.

கண்களில் நீர் வடிதல், கண்வலி, எரிச்சல், இமைகள் ஒட்டி கொள்ளுதல், கிருமி தொற்று போன்ற கண்களைப் பாதிக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் இந்தப் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தப் பூக்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து, 3 மணி நேரம் கழித்து அந்தத் தண்ணீரில் கண்களை கழுவி வரலாம்.

நுண்கிருமிகளை வெளியேற்றும் திறன் இந்தப் பூவிற்கு உண்டு. இதில்  பீட்டா சைட்டோஸ்டீரால், லிரியோடினின், மோனோசெஸ்குட்டிர்பின் போன்றவை கிருமி நாசினியாக பயன்படத் தூண்டுகிறது.

வைரஸ், பாக்டீரியாக்களால், உண்டாகும் காய்ச்சலை விரட்ட இந்த பூக்கள் உதவுகின்றன. சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற உஷ்ண கோளாறுக்கும், உடலிலுள்ள பித்தத்தை நீக்கவும், நரம்பு தளர்ச்சி, வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்ற குறைபாடுகளுக்கும், இந்தப் பூக்கள் பயன்படுகின்றன.

பூக்களை எடுத்து சிறிது கசகசா, பனங்கற்கண்டு சேர்த்து மையாக அரைத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து, வடிகட்டி பாலில் சேர்த்து, இரவு தூங்கப் போகும்போது குடித்தால் மன உளைச்சல் நீங்கி நன்றாகத் தூக்கம் வரும். உயர் ரத்த அழுத்தம் குறையும்.

பூக்களை அரைத்து விழுதாக்கி  நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி சூடு ஆறியதும் வடிகட்டி எடுத்து உடலில் எங்கு வலி ஏற்பட்டாலும் தேய்க்கலாம். வீக்கம், கை கால் எரிச்சல், மூட்டு வலி, முழங்கால் வலி, தலை வலி என அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

100 கிலோ பூக்களில் இருந்து 200 கிராம் வரையிலான அத்தர் எடுக்கப்படுகிறது. பன்னீர் மற்றும் சந்தனம் போன்ற பலவித வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகி்ன்றன.

இதையும் படியுங்கள்:
நன்றி சொல்ல நேரமில்லையா? அடடா!
செண்பக மரம்...

இதன் இலையானது உடல் சூட்டைத் தணிக்கிறது. பசியே இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பசியைத் தூண்டுகிறது.

இளம் தளிர் இலையை அரைத்து தண்ணீரில் கலந்து கண்களில் விட்டால் பார்வை நன்கு தெரியும். மரப்பட்டைகள் சளி தொல்லைகளிலிருந்து நல்ல நிவாரணியாகப் பயன்படுகிறது.

விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் வயிற்று  வலியைப் போக்குகிறது. மேலும், பாத வெடிப்பு, அஜீரணம், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது.

செண்பக மரம் வளர்ப்போம்... சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்போம்... நற்பயன் அடைவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com