
-ஆர். லலிதா
திடீரென்று அந்த ஐடியா தோன்றியது விலாசினிக்கு.
''சுகந்தி... நாளைக்கு நான் லீவு போடட்டுமா?"
"ஏன்.. என்ன திடீர்னு?" - பக்கத்து சீட்டில் இருந்த சுகந்திக்கு ஆச்சரியம்.
"சும்மாதான்! ரொம்ப நாளாச்சு வீட்டுல ஹாய்யா இருந்து! அவரும் வீட்டுல இல்ல, பிள்ளைங்களும் பாட்டி வீட்டுக்குப் போயிருக்குங்க!"
"ஓகே! என்ஜாய் யுவர்செல்ஃப்!"
"நிஜமாடி... என்ஜாய்தான் பண்ணப் போறேன்!" - தன் திட்டத்தை சுகந்தியிடம் விவரித்தாள் விலாசினி.
சாயங்காலம் வீட்டுக்குப் போகும்போதே மறுநாள் என்னென்ன செய்ய வேண்டும் என்று மனசுக்குள் ஒரு பிளான் போட்டாள்...
காலையில் லேட்டா எழுந்திருக்கணும். ஒரு ஏழரையாவது ஆகட்டும். மெள்ள எழுந்து, நல்லெண்ணெய் காய வெச்சு, சூடு பறக்கத் தேய்ச்சுக் குளிக்கணும். ஆற அமர சாம்பிராணி போட்டுத் தலையை உலர்த்தணும்.
குத்துவிளக்கு, பூஜை சாமானெல்லாம் சும்மா தங்கமாட்டம் தேய்ச்சு, சுவாமிப் படங்களைத் துடைச்சு, சந்தனம், குங்குமம் பொட்டு வைக்கணும்.