கூந்தலைப் பாதுகாக்க எளிய வழிகள்!

கூந்தலைப் பாதுகாக்க எளிய வழிகள்!
Published on

பெண்களுக்கு முடி அழகு முக்கால் அழகு என்பார்கள். அன்றன்று வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே கூந்தலைப் பராமரிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை இங்கே காணலாம். 

டைத்த நாளான தேங்காயை சமையலில் சேர்க்க பலர் பயப்படுவார்கள். அதைத் தூக்கி எறியாமல் இதில் சிறிது சுடுநீர் சேர்த்து அரைத்து தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். அரைமணி நேரம் ஊற வைத்து குளிக்கவும். கூந்தலின் மயிர்க்கால்கள் வலுப்பெற இது உதவும். 

தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழிந்து, அதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி அரைமணி நேரம் ஊறவைத்து பிறகு சீயக்காய் அல்லது கடலைமாவு தேய்த்து குளிக்கலாம். 

சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப்பொடி, பயத்தமாவு சம அளவில் கலந்து ஊறவைத்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம். 

லைக்கு சீயக்காய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் சீயக்காய் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால் கூந்தலில் உள்ள அழுக்குகள் சுத்தமாக நீங்கிவிடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும். 

தேங்காய் எண்ணெய்யுடன் காயவைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக்கொண்டு தடவலாம். கூந்தல் கறுப்பாகவும் செழிப்பாகவும் வளரும். 

பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும் அதிமதுரமும் சம அளவு எடுத்து பொடி செய்து, பசும்பாலில் குழைத்து தலையில் தடவி, அரைமணி நேரம் ஊறவைத்த பிறகு குளித்தால் விரைவில் நரை மாறும். 

சிலருக்கு வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்தக் குறைபாட்டை நீக்கும். பால், தயிர், பழங்கள், கோஸ் கொண்ட இலை காய்கறிகள், இறைச்சி, முட்டை, முழு தானியங்கள் போன்றவற்றில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உடலுக்கு நிறைய கிடைக்கிறது. இதை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் கரு கரு முடி நிச்சயம் வளரும். 

ரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால்பந்து, பச்சைப் பயிறு அரைப்பங்கு புங்கங்காய் கைப்பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் லேசாக தண்ணீர் விட்டு கரைத்தால் ஷாம்பு ரெடி. ரசாயன பொருட்கள் கலக்காத இந்த ஷாம்பு எந்த வித தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் நன்கு வளரும். 

பிளாஸ்டிக் சீப்புக்கு பதிலாக மர சீப்பு பயன்படுத்துவது நல்லது. நல்ல மரச் சீப்பினால் அழுந்த தலைவரினால் மயிர் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது. சீப்பை உங்களுக்கென்று தனியாக வைத்துக் கொள்ளவும். வாரம் ஒரு முறையாவது அதை கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும். 

ரு கிண்ணத்தில் மருதாணிப்பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சமஅளவு சேர்த்துக் குழைத்து தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும். அரைமணி நேரம் கழித்து தலைக்குக் குளிக்கலாம். கூந்தல் மென்மையாக வளர இந்த மருந்து உதவும். மேலும் வெள்ளை முடி இருந்தால் இதனால் மறைக்கப்படும். 

சோற்றுக்கற்றாழை ஜெல்லை ஒரு டீஸ்பூன் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், அரை டீஸ்பூன் தேன் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் கலந்து அப்படியே ஷாம்பு போல தலையில் தேய்க்கவும். அரைமணி நேரம் ஊறிய பிறகு குளிக்கவும். இதில் கூந்தலுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள் பல உண்டு, சிலருக்கு கூந்தலில் அதிக எண்ணெய் சுரந்து அதிக  பாக்டீரியாக் களையும், அழுக்குகளையும் சேர்ப்பதால் கூந்தல் வீணாகும். இந்த அதிகமான எண்ணெய்ச் சுரப்பைத் தடுத்து கூந்தலை அபரிமிதமாக வளரச் செய்யும் ஆற்றல் பெற்றது கற்றாழை. 

ரு முட்டையை பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, அதில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து, நன்றாக கலக்கி அடித்து அதைத்தலையில் தடவி மசாஜ் செய்துவிட்டு, அரைமணி நேரம் கழித்து குளிக்கவும். கூந்தலுக்கு தேவையான புரோட்டின் சத்தை இது தந்து நன்கு வளரச் செய்யும். 

இயல்பாக ஒருவரின் கூந்தல் ஆண்டுக்கு 12 முதல் 15 சென்டிமீட்டர் நீளம் வளர வேண்டும். எனினும் மன அழுத்தம், வெயிலில் அலைவது, தூக்கமின்மை, சுற்றுச்சூழல் சீர்கேடு, வைட்டமின் குறைபாடு, மரபுனு காரணங்கள், வேறு பிரச்னைகளுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் என பல காரணங்களால் கூந்தல்  தன் இயல்பைத் தொலைக்கக் கூடும். எனினும், மேலே கூறிய இதுபோன்ற சில எளிய வழிகளால் கூந்தலைப் பாதுகாக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com