

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி அவர்களின் திரைப்பயணம், சிறப்பான கதாபாத்திரங்கள் மற்றும் விருதுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
எத்தனையோ நடிகைகள் அவர்களுடைய அழகாலோ , நடனத்தாலோ, தோற்றத்தாலோ ரசிகர்களின் மனங்களை கவரலாம்! ஆனால், சினிமா என்கிற கனவு உலகத்தில் தன்னுடைய நடிப்பு திறனால் மட்டும் ஜொலித்த வெகு சில நடிகைகளில் இப்பொழுது நம்மை விட்டு மறைந்த சவுகார் ஜானகி முதன்மையானவர்.
தன் சிறிய உடல்வாகு, இயல்பு தன்மை மிகுந்த முகபாவனை, இனிமையான குரல் எல்லாம் சேர்ந்து ஒரு கதாநாயகியாகவும், பிற்காலத்தில் ஒரு குணச்சித்திர நடிகையாகவும் மிளிர்ந்த ஒரு பெண்மணிதான் சவுகார் ஜானகி.
தமிழில் ஜானகி:
ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜமஹேந்திரவரத்தில் 1931 ஆம் ஆண்டு பிறந்த ஜானகி தன் சுய உழைப்பால்தான் பலவித உயரங்களை தொட்டவர். சின்ன வயதிலிருந்தே ஆங்கிலமும், தெலுங்கும் முறைப்படி கற்று தேர்ந்த அவர் சென்னை வானொலியின் தெலுங்கு பிரிவின் கீழ் இயங்கப்பட்ட ரேடியோ நாடகங்களில் குரல் வழி நடிப்பு எப்படி காட்டணும், எப்படி நவரசங்களும் குரலில் கொண்டுவரனும் என்று மிக கவனத்துடன் கற்றார்.
1950 ல் வெளிவந்த தெலுங்கு படம் 'சவுகார் என்ற படத்தில் அப்பாவியான ஒரு வெகுளி கிராமத்துப்பெண் வேடத்தில் நடித்து எல்லாராலும் 'சவுகார் ஜானகி' என்றே அழைக்கப்பட்டார்.
1952 ல் சேலம் மாடர்ன் தியேட்டர் தயாரிப்பில் உருவான 'வளையாபதி' தான் ஜானகியின் முதல் தமிழ் படம். ஆனால் அது வெற்றி பெறவில்லை. சின்ன சின்ன படங்கள் நடித்தாலும் ஜானகி தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது 1960 ல் வெளியான 'பாவைவிளக்கு' படத்தில் கவுரி கதாபாத்திரத்தில்தான். சிவாஜிக்கு ஜோடியா நடிச்சா முதல் படம் இதுவே! அதே ஆண்டு வெளியான 'படிக்காத மேதை' படம் ஜானகிக்கு சிவாஜியோடு போட்டி போட்டு நடிக்கக்கூடிய வாய்ப்பை தந்தது.
அடுத்த ஆண்டு வெளியான 'பாக்கியலட்சுமி' படத்தில் சோக ரசத்தின் உச்சிக்கு கொண்டுபோன கமலா என்ற கைம்பெண் கதாபாத்திரத்தில் தமிழ் மக்களின் அன்பு கதாநாயகியாக ஆதரிக்கப்பட்டார் ஜானகி. அந்த ஆண்டே வெளியான 'குமுதம்' படத்தில் குமுதாவாக ஒரு பார்வையற்ற பெண்ணாக கலக்கியிருப்பார் ஜானகி. 1961 ல் இயக்குனர் பீம்சிங்கின் 'பாலும் பழமும்' படத்தில் சிவாஜியை சாடி வெளுத்து வாங்குகிற படித்த மனைவி நளினியாக நடித்து இருப்பார்.
1962 ல் வெளிவந்த 'பார்த்தால் பசி தீரும்' படத்தில் காணுவனுக்கும, அவருடைய முதல் மனைவிக்கும் நடுவே தவிக்கிற 'ஜானகி' கதாபாத்திரத்தில் கண்கலங்க வைத்தவர். அதே ஆண்டு வந்த ஏவிஎம்யின் 'அன்னை' படத்தில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த பானுமதிக்கே சவால் விட்ற சீதாவாக, தன் சொந்த மகனையே தன் தமக்கைக்காக விட்டுக்கொடுத்த தியாகியாக ஜொலித்தார் ஜானகி.
அவருடைய திரை வாழ்க்கையிலேயே மைல்கல் என சொல்லவேண்டிய படம் 'புதிய பறவை'. 1964 ல் எந்த நடிகையும் செய்ய தயங்குகிற வில்லி போன்ற வேடத்தில் சித்ராவாக, தன் கெட்ட பழக்கத்தால் கணவரையே எதிர்த்து பேசுகின்ற ஒரு நவீன யுவதியாக காலத்தால் அழியாத கதாபாத்திரமாக 'பார்த்த ஞாபகம் இல்லையோ' என்று அவர் ஒரு நிமிட கிளப் பாடகியாக நீங்கா இடம் பெற்றார் ஜானகி.
சவுகார் - பாலச்சந்தர் யுகம்!
1965 ல் சவுகார் ஜானகி திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை எனலாம். இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் தன் முதல் படம் 'நீர்க்குமிழி' யில் டாக்டர் இந்திராவாக ஜானகியை தேர்ந்தெடுத்தார்.
1967 ல் 'பாமா விஜயம்' படத்தில் மூத்த மருமகளாக பார்வதி கதாபாத்திரத்தில் கலக்கி நகைச்சுவை உணர்விலும் களைகட்டி நடித்தார்.
1968 ல் பட்டு மாமி (எதிர்நீச்சல்), ஒளி விளக்கு படத்தில் சாந்தி, என பல்வேறு பரிமாணங்களில் தன் நடிப்பின் பன்முக திறைமையை காட்டி ரசிகர்களை கட்டி போட்டவர். ஏவிஎம் தயாரித்த 'உயர்ந்த மனிதன்' படத்தில் மேற்கத்திய கலாச்சாரம் மிகுந்த ஒரு பிடிவாதக்காரியான தொழில் அதிபரின் மனைவியாக சிவாஜிக்கே மோதல் குடுக்கிற 'விமலா'வாக நடித்தார். இப்படம் அவருடைய வாழ்க்கையிலேயே மறக்க முடியாத படமாகும்.
திருப்பி பாலச்சந்தர் படமான 'இரு கோடுகள்' படத்தில் கலெக்டர் ஜானகியாக மற்றும் ஒரு மகா நடிப்பு காண்பித்தார் அவர்.
ஜானகி தயாரிப்பாளராக மாறி எடுத்த ஒரே படம் 'காவியத்தலைவி', 1969 ல் வந்த இப்படம் இரட்டை வேடங்களில் தாயும் மகளுமாக ரெண்டு வித்தியாசகங்ளை ஒரே நொடியில் காட்டினார் ஜானகி. இதும் பாலச்சந்தர் இயக்கமே!
1981 ல் பாலச்சந்தர் இயக்கிய 'தில்லு முல்லு' படத்தில் ஒரு நடிகையாகவே தோன்றி கலக்கியிருப்பாங்க ஜானகி.
தொடர்ந்து 'புது புது அர்த்தங்கள்', 'அழகன்' படங்களில் நடித்தவர், தன் சொந்த மொழியான தெலுங்கில் நக் அஸ்வின் இயக்கத்தில் avarudaiya முதல் படமான 'எவடே சுப்ரமண்யம்' (2015) ல் பாட்டி வேடத்தில் நடித்தார்.
2020 ல் வந்த சந்தானம் கதாநாயகனாக நடித்த 'பிசுக்கோத்' தான் ஜானகி நடித்த கடைசி தமிழ் படம் . அவருடைய திரை வாழ்க்கையின் கடைசி படம் தெலுங்கில் நந்தினி ரெட்டி என்ற பெண் இயக்குனர் இயக்கிய 'அன்னி மான்சி சகுனமுலே' 2023 ல் வெளிவந்தது.
தமிழக அரசு 'கலைமாமணி' 1969 ல் வழங்கி கவுரவித்தது. இந்தியா அரசு 2022 ல் 'பத்மஸ்ரீ' விருது கொடுத்து கவுரவித்தது!
எல்லாவற்றுக்கும் மேலாக அவர் விட்டு சென்ற கதாபாத்திரங்கள் நம்மை விட்டு போகாது! 'பார்த்த ஞாபகம் இல்லையோ' என்று நினைவு படுத்திக்கொண்டே இருக்கும்!
சவுகார் ஜானகி அம்மாவின் புகழ் ஓங்கி நிற்கும் என்றும் என்றென்றும்!
இந்தத் தகவல்கள் பழம்பெரும் கலைஞர்களின் உழைப்பையும், தமிழ் திரையுலகின் பொற்கால வரலாற்றையும் முழுமையாகப் புரிந்து கொள்ளவும், அவர்களின் கலைப் பங்களிப்பை எதிர்கால சந்ததியினர் அறியவும் உதவுகிறது.