ஆண்கள் VS பெண்கள்: உண்மையில் யார் புத்திசாலி? - அறிவியல் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

Man and Woman
Man and WomanImg Credit: Freepik
Published on
mangayar malar stripe

ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே உள்ள எண்ணற்ற வேறுபாடுகளில், மூளையின் அளவு விவாதத்திற்கு உரிய ஒன்றாக இருக்கிறது. மனிதர்களின் மூளை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், சராசரியாக, ஒரு ஆணின் மூளை ஒரு பெண்ணின் மூளையை விட 10% முதல் 15% வரை பெரியது என்று கண்டறியப்பட்டுள்ளது.

’மூளையின் அளவு பெரியதாக இருந்தால், மூளையின் செயல்பாடும் அதிகமாக இருக்குமா?’ என்னும் கேள்வி எழுவதும் இயற்கையே. பல நூற்றாண்டுகளாக, ஆண்களின் மூளையின் அளவால் தவறாக வழிநடத்தப்பட்டு, அறிவுசார் விஷயங்களில் சமூகத்தில் பெண்களின் சிந்திக்கும் திறன் பற்றிய தவறான நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டுவிட்டன.

மூளை பற்றிய ஆய்வு ஒன்று Brain இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், 42 ஆண்கள் மற்றும் 58 பெண்களின் மூளையை ஒப்பிட்டுப் பார்த்ததில், ஆண்களின் மூளை சராசரியாக 1,378 கிராம் எடையுள்ளதாகவும், பெண்களின் மூளை 1,248 கிராம் எடையுள்ளதாகவும் கண்டறியப்பட்டது.

ஆண்களின் மூளையில் அதிக விகிதத்தில் வெள்ளைப் பொருளும், பெண்களின் மூளையில் சாம்பல் நிறப்பொருளும் உள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. மேலும், பெண்களின் மூளையில் புறணிப்பகுதி தடிமனாக இருப்பதாகவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

ஆண்களின் மூளையில் உள்ள வெள்ளைப் பொருள் கற்றல், நினைவாற்றல், முடிவெடுத்தல், புலன் உணர்வு போன்ற பணிகளுக்குத் தேவையான தகவல்களை விரைவாகப் பரிமாறிக் கொள்ள அனுமதிக்கின்றது. மேலும் அவர்களின் மூளை இயக்கத்திற்கான தசைகளுக்கு துல்லியமான சமிக்ஞைகளை அனுப்பவும் உதவுகிறது. அறிவாற்றல் நெகிழ்வுத்தன்மை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறனுக்கு இது மிகவும் அவசியம், ஏனெனில் இது வெவ்வேறு நரம்பியல் சுற்றுகளிலிருந்து தகவல்களை ஒருங்கிணைக்க உதவுகிறது. மேலும் முதுகெலும்பின் பல்வேறு பகுதிகளை இணைத்து, மென்மையான ஒருங்கிணைப்பு மற்றும் உடல் செயல்பாட்டை உறுதி செய்கின்றது.

பெண்களின் மூளையில் அதிக அளவு உள்ள சாம்பல் நிறப் பொருள் பெண்கள் மூளையின் செயல்பாட்டு மையமாகச் செயல்படுகிறது. இது பெண்களின் சிந்தனை, உணர்ச்சி, தொடர்புகள் போன்றவற்றை வரையறுக்கும் முக்கியமான செயல்முறைகளைக் கையாளுகிறது.

வாழ்நாள் முழுவதும் அறிவாற்றல் மற்றும் மோட்டார் திறன்களைப் பராமரிக்க அதன் சரியான செயல்பாடு அவசியம். சாம்பல் நிறப் பொருளின் அளவு மற்றும் ஆரோக்கியம் மூளையின் செயல்பாட்டை கணிசமாக பாதிக்கும். வயதாவது, நியூரோடிஜெனரேட்டிவ் நோய்கள் அல்லது காயம் போன்ற காரணிகள் சாம்பல் நிறப் பொருள் இழப்புக்கு வழிவகுக்கும். நினைவாற்றல், அறிவாற்றல் மற்றும் மோட்டார் திறன்களைப் பாதிக்கும். கற்றல், உடற்பயிற்சி மற்றும் மன தூண்டுதல் போன்ற செயல்பாடுகள் சாம்பல் நிறப் பொருள் வளர்ச்சி மற்றும் இணைப்பை ஊக்குவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஆண்களின் மூளையில் உள்ள அதிக சாம்பல் நிறப் பொருள் ஆண்களின் உடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. மறுபுறம், பெண்கள் மூளையில் அதிக வெள்ளை நிறப் பொருள் பெண்களின் மூளைப் பகுதிகளுக்கு இடையேயான தொடர்பை வெளிப்படுத்துகிறது.

brain
brain

இதனால்தான், சில நேரங்களில், ஆண்களும் பெண்களும் குறிப்பிட்ட பணிகளை வித்தியாசமான முறையில் செய்கிறார்கள், ஆனால் கற்றல், பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் ஆழமாகச் சிந்திப்பது போன்றவற்றில் ஆண்-பெண் இருவரின் மூளையும் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகிறது. மூளையின் அளவு மாறுபடுவதற்கும் மூளையின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கும் தொடர்பில்லை.

ஆண் மூளை பொதுவாக பெண்ணின் மூளையை விட தோராயமாக 10% முதல் 15% வரை பெரியதாக இருந்தாலும், இந்த அளவு மாறுபாடு மூளையின் ஒட்டுமொத்த நுண்ணறிவு, அறிவாற்றல் திறன் மற்றும் செயல்பாட்டில் வேறுபாட்டினை ஏற்படுத்துவதில்லை என்று நிபுணர்கள கூறுகிறார்கள். மூளையின் செயல்பாடுகள் அளவைப் பொறுத்தது அல்ல, மாறாக அது எவ்வளவு திறமையாக செயல்படுகிறது என்பதைப் பொறுத்ததே, என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
மூளையோட சூப்பர் செக்யூரிட்டி சிஸ்டம் -Blood Brain Barrier எப்படி வேலை செய்யுதுனு பார்ப்போமா?
Man and Woman

அளவின் மாறுபாடு அறிவுசார் திறன்கள் அல்லது அறிவாற்றல் திறன்களில் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தாது. பிற வேறுபாடுகள் மூளையின் அளவில் மட்டுமின்றி, மூளையின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையிலான தொடர்புகள் இரு பாலினருக்கும் இடையில் வேறுபடுகின்றன. பெண்களின் மூளை உணர்ச்சி நுண்ணறிவு, சூழ்நிலை பகுப்பாய்வு, முடிவு எடுத்தல் மற்றும் உள்ளுணர்வு சிந்தனை உள்ளிட்ட பணிகளில் அவர்கள் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது.

ஆண்களின் மூளை பொதுவாக மூளையில் முன்னும் பின்னுமாக சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இது மோட்டார் திறன்கள் மற்றும் புலனுணர்வுடன் அதிகம் தொடர்புடையது. மூளை அமைப்பு மற்றும் இணைப்பில் உள்ள மாறுபாடு, ஆண்களும் பெண்களும் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் தகவல்களைச் செயலாக்குவதிலும் வெவ்வேறு வழிகளைத் தீர்மானிக்கும்.

இதையும் படியுங்கள்:
Mom Brain எனும் அறிவாற்றல் மாற்றங்களை சரி செய்வது எப்படி?
Man and Woman

மனித மூளையில் ஒளிந்திருக்கும் மர்மங்களை முழுவதும் தெரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. மேலும் மூளையைப் பற்றிய ஒவ்வொரு ஆராய்ச்சியும் மூளை சார்ந்த அடுத்தடுத்த ஆராய்ச்சிக்கான கதவுகளைத் திறக்கின்றன என்பதே உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com