இனிப்பான வாழ்வு!

இனிப்பான வாழ்வு!

ம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80- 120 மிகி சதவிகிதம் வரை இருத்தல் தான் சரியானது. நீரிழிவு நோயாளிகள் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம்தான் அதிகப் பலனை அடைய முடியும். மேலும் உடல் பருமன் நோய்க்கு ஒரு காரணமாகின்றது. இவ்வாறு கூறும்பொழுது நோயாளிகள் எதைத் தவிர்ப்பது எதை உட்கொள்வது என ஐயுறுகின்றனர்.

நீரிழிவு ஆராய்ச்சி மையம், வெளியிட்டுள்ள பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இது நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கும்.

உண்ணக் கூடியவை

அரிசி, கோதுமை, கேழ்வரகு, மக்காச்சோளம், முழு கடலை பச்சைப் பயிர், காராமணி, பட்டாணி, மொச்சை, நார்ச்சத்து உணவு, பீன்ஸ், பாகற்காய், சுரைக்காய், கத்திரி, முட்டை கோஸ், கோவிப்பூ, கொத்தவரை, சௌசௌ, அவரை, வெள்ளரி, முருங்கை, குடை மிளகாய், கீரை (எல்லா வகைகளும்) கோவைக்காய், வெண்டை,. வெங்காயம், பப்பாளிக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, பீர்க்கங்காய், வெள்ளை. முள்ளங்கி, தக்காளிக்காய், பழம், புடலங்காய், நூல்கோல், பூண்டு, இஞ்சி, கொ. மல்லி, கறிவேப்பிலை, புதினா ஆகியன.

தவிர்க்கப்பட வேண்டியவை

1. மண்ணிற்குக் கீழ் விளையும் கிழங்கு வகைகள், 2. நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய், 3. சர்க்கரை, தேன், க்ளூகோஸ், வெல்லம், இனிப்பு வகைகள், 4. முந்திரி, பிஸ்தா, பாதாம் போன்ற கொட்டை வகைகள், 5. குளிர்பானம், மதுபானம், வாழைப்பழம், மாம்பழம், பலாப் பழம், சப்போட்டா பழம், 6. உலர்ந்த பழ வகைகள்.

கோமா' எனப்படும் நினைவற்ற மயக்கம் நீரிழிவு நோயாளிகளுக்கு இரு காரணங்களால் ஏற்படும். ஒன்று உடலில் அதிகச் சர்க்கரை. 2. உடலில் குறைந்த சர்க்கரை. இரு வகையுமே ஆபத்தானது. நோயாளி மயக்கமென கூறும்பொழுது சிறிது சர்க்கரை கொடுத்து பதினைந்து நிமிடங்களுக்குள் தெளிந்துவிடின் உடலில் குறைந்த சர்க்கரை மயக்கமாகும். இந்த மயக்கம் மிகவும் ஆபத்தானதால் உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். ஆகவேதான் சர்க்கரை நோயாளிகளை, குறிப்பாக இன்சுலின் எடுத்துக்கொள்பவர்களை எப்போதும் சிறிது சர்க்கரையைக் கையில் வைத்துக்கொள்ளச் சொல்லுகின்றனர்.

சர்க்கரை நோயுள்ள பெண்கள் கருத்தடை மாத்திரைகள் உபயோகிக்காமல் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தலாம்.

இயற்கை வைத்தியத்தில் தினம் இரண்டு வேப்பிலை அல்லது பத்து கறிவேப்பிலை வெறும் வயிற்றில் உண்பது சிறந்ததாகச் சொல்லப்படுகின்றது.

நாவல் பழ கொட்டையின் தூள் சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com