நம் வீட்டுக் குழந்தைகளுக்கு நடைமுறையில் சில மாறுதல்கள் ஏற்படும். சரியாக சாப்பிடுவதில்லை, வயிற்று வலி... இப்படி பல தொந்தரவுகள் அக்குழந்தை குழந்தைகளுக்கு இருக்கும். இதெல்லாம் எதனால் ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது என்பது குழந்தைகளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால் அவைகளை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி வந்துவிட்டால் அம்மாக்களை பெரிதும் கவலை அடைய செய்கிறது. ஒட்டுண்ணிகளாக இருக்கும் இந்த புழுக்கள் குழந்தைகளின் உடலில் வந்ததும், குழந்தைகள் உண்ணக் கூடிய உணவுகளை இவை தின்று குழந்தைகளின் வளர்ச்சியை குறைத்துவிடுகிறது. அதனால் இந்த புழுக்களை அழித்து விட வேண்டும். இல்லையெனில், குழந்தைகளின் உயிர்க்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய நோய்களை அளித்து எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும்.
வயிற்றில் புழுக்கள் அதிகமாக இருந்தால் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் செரிமான மண்டலத்திற்குள் செல்லாமல் வயிற்று போக்கை ஏற்படுத்தும். அது மட்டுமின்றி வாயு தொல்லை, குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் ஒரு விதமான எரிச்சலையும் உண்டாக்கும். நார்சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் இப்படிபட்ட பிரச்சனைகளை தடுக்கலாம்.
மலவாயில் அரிப்பு ஏற்பட்டு இதன் காரணமாக குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் தூக்கம் கெட்டு சோர்வாக காணப்படுவார்கள். அடிக்கடி இந்த மாதிரி பிரச்சனை ஏற்பட்டால் வயிற்றில் பூச்சிகள் அதிகளவில் இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். நாம் அவர்களுக்கு எவ்வளவு சத்து நிறைந்த உணவுகளை கொடுத்தாலும் அவற்றின் சத்துக்களை புழுக்கள் உறிஞ்சு, குழந்தைகளை சோர்வாகவே வைக்கும். பசி எடுக்காமல் இருக்கும். உடல் எடை குறையும். இதனால் வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த புழுக்களை அழிக்க வேண்டியது அவசியமாகும்.
உங்கள் குழந்தைகள் இரவில் தூங்க செல்லும்போது பற்களை கொறித்தால் வயிற்றில் புழுக்கள் இருப்பதாக அர்த்தம். இதற்கு காரணம் உடலில் இருக்கும் புழுக்களால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்படுத்தி என்ன செய்வதென்று அறியாமல் செய்வார்கள்.
அதேபோல் உடலில் ஏற்படும் இரத்த சோகை போன்றவை ஏற்பட காரணம், உருளை புழுக்கள் இருப்பது ஆகும். உங்கள் குழந்தைகள் சாப்பிடும் இரும்பு சத்து, வைட்டமின் அடங்கிய உணவை உறிஞ்சுவதால், இது நிகழ்கிறது. உடலில் ஒட்டுண்ணிகள் இருந்தால் சரும அரிப்பு மற்றும் எரிச்சல் கூட சில சமயத்தில் உண்டாகும். இந்த மாதிரியான அறிகுறிகள் உங்கள் குழந்தைகளுக்கு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.