மினி தொடர்கதை: அப்பாவின் டைரிக் குறிப்பு - அத்தியாயம் 1

மினி தொடர்கதை | Elderly man with photo
மினி தொடர்கதை | Elderly man with photoAI Image
கல்பனா ராஜகோபால்

கல்பனா எனும் நான் பள்ளிப் பருவத்திலிருந்தே என்னுள் இருக்கும் தமிழார்வத்தால் புத்தகம் வாசிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என் கவிதைக்கு முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் பெற்று உள்ளேன். என் கவிதை முதன் முதலில் மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியாகி அதற்கு பரிசும் பெற்றேன். பணி ஓய்வுக்கு பிறகு என் எழுத்துப் பணியை கல்கி ஆன்லைனில் தொடந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு நல்கிய. கல்கிக் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Updated on
MM strip
MM strip

மணக்கும் தோட்டமும், மறையாத நினைவுகளும்

கேட்டைத் திறந்தவுடன் ஜாதி மல்லி, பிச்சை, சம்பங்கி பூக்களின் கலந்த மணம் மூக்கைத் துளைத்தது. ஒரு கணம் மூச்சை ஆழமாக இழுத்து அந்த வாசனையை உள்ளே நிறைத்துக்கொண்டார் ருத்ரமூர்த்தி. அந்த வாசனையில் இன்னும் சுஜாவின் விரல் தடங்கள் இருந்தன.

வீட்டைச் சுற்றியிருந்த தோட்டம் முழுவதும் ஒரு வாரமாக உதிர்ந்த பூக்களும், இன்று புதிதாக மலர்ந்த பூக்களும் கலந்து ஒரு கதம்ப வாசனையைப் பரப்பிக்கொண்டிருந்தன.

“சுஜி இருந்திருந்தா தோட்டம் இப்படியா இருக்கும்…? சுஜாவிற்கு எதுவுமே சுத்தமாக இருந்தால்தான் பிடிக்கும்…” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கதவைத் திறந்தார்.

உள்ளே சென்று நேராக அறைக்குள் இருந்த சுஜாதாவின் புகைப்படத்தின் முன் நின்றார். புகைப்படத்தில் அவள் வழக்கம்போல் மெதுவாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

“வந்துட்டேன் சுஜி… முதல்ல உன்னோட தோட்டத்தைச் சுத்தம் பண்ணிட்டு வர்றேன். அப்புறம் உனக்கு விளக்கு போடுறேன்… சரியா?” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com