

அன்பு கலந்த மனிதம் கேட்டேன்!
ஆசை இல்லா மனமே கேட்டேன்!
இளமையில்கல்வி கிடைத்திடக்கேட்டேன்!
பிடித்த கல்வி பயின்றிடக்கேட்டேன்!
கூட்டுக்குடும்பம் தொடரக்கேட்டேன்!
பிச்சைபுகலா வாழ்வே கேட்டேன்!
நல்ல காதலி அமைந்திட கேட்டேன்!
படிப்புக்கேற்ற வேலைகேட்டேன்!
அறிவுரை சொல்லா தந்தை கேட்டேன்!
அன்பே கிடைக்கும் அம்மா கேட்டேன்!
துரோகம் கலவா சகோதரன் கேட்டேன்!
தன்னிகரில்லா தமக்கை கேட்டேன்!
அன்பு பாராட்டும்அண்ணி கேட்டேன்!
உயிரைக்காத்திடும் தோழன் கேட்டேன்!
உதவி புாிந்திடும் சுற்றம் கேட்டேன்!
உண்மை பேசிடும் உறவுகள் கேட்டேன்!
கேட்டதை அருளும் தெய்வம் கேட்டேன்!
போதை இல்லா சமூகம் கேட்டேன்!
வரதட்சணை கேட்கா இதயம் கேட்டேன்!
உறுதி தளராத உள்ளம் கேட்டேன்!
கூடா நட்பு தவிா்த்திடக்கேட்டேன் !
புாிந்து வாழும் துணையைக்கேட்டேன்!
புழுதிபடாத வீதிகள் கேட்டேன்!
புனிதம் நிறைந்த பழக்கம் கேட்டேன்!
துயரம் தராத துணையைக்கேட்டேன்!
குறைகள் இல்லா உடலும் கேட்டேன்!
மரணம் நாடா வெற்றி கேட்டேன்!
ஆசை தீர வாழ்ந்திடக் கேட்டேன்!
ஆபத்தில்லா பயணம் கேட்டேன்!
பந்தயம் போடாத பங்காளி கேட்டேன்!
உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்டேன்!
மனிதம் பாா்க்கும் மக்களைக்கேட்டேன்!
வாழ்வின் மகிழ்வாய் வாாிசு கேட்டேன்!
சொன்னசொல் கேட்கும் பிள்ளை கேட்டேன்!.
மகளாய் வாழும் மருமகள் கேட்டேன்!
ருசியாய் சாப்பிட உணவு கேட்டேன்!
ஆபத்தில்லா பயணம் கேட்டேன்!
நோய்நொடி இல்லா உடம்பைக் கேட்டேன்!
அன்பகலாத துணையை கேட்டேன்!
மகள் மனம் கோணா மாமியாா் கேட்டேன்!
மகன் போல பழகிடும் மருமகன் கேட்டேன்!
வறுமை இல்லா முதுமை கேட்டேன்!
முதுமையில் உதவும் வாாிசுகேட்டேன்!
துயரம் போக்கும் உறவுகள் கேட்டேன்!
வஞ்சகம் இல்லா சுற்றம் கேட்டேன்!
ஏமாற்றமில்லா ஏற்றம் கேட்டேன்!
என்றும் அழியா இளமை கேட்டேன்!
என்றும் வளர்ந்திடும் அன்பைக்கேட்டேன்!
ஏமாற்றம் தாங்கும் உள்ளம் கேட்டேன்!
எங்கும் எதிலும் உண்மை கேட்டேன்!
உறவுகள் என்றும் நிலைத்திடக் கேட்டேன்!
நோயை நீக்கும் மருந்துகள் கேட்டேன்!
விஷமே இல்லாத உணவே கேட்டேன்!
உணவே மருந்தாய் அமைந்திடக் கேட்டேன்.
நீதி தவறாத சட்டம் கேட்டேன்.
வட்டியில்லாத கடனும் கேட்டேன்!
கோபம் வராத குணமே கேட்டேன்!
கடனே இல்லா வாழ்வு கேட்டேன்!
வசதிக்குாிய வீடு கேட்டேன்!.
கருணை நிறைந்த உள்ளம் கேட்டேன்!
வரவுக்கேற்ற செலவுகள்கேட்டேன்!
வசதிக்கேற்ற வாழ்வு கேட்டேன்!
சூதே இல்லாத சுற்றம் கேட்டேன்!
எல்லா நலனும் அமைந்திடக்கேட்டேன்!
தனிமை இல்லா வாழ்வு கேட்டேன்!
ஆறுதல் கூறிடயாருமே இல்லை!
உதவிகள் செய்ய நபர்களும் இல்லை!
கேட்டது எதுவும் கிடைக்கவில்லை!!
கிடைத்தது எதுவும் நிலைக்கவில்லை!!
விருப்பமில்லா மரணம் கேட்டேன்!
இறைவன் துணையே நிலைத்திடக் கேட்டேன்.