கவிதை: சொக்கம்மா...

ஏழ்மையின் உச்சத்திலும் அன்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட சொக்கம்மா, தன் எளிய வாழ்க்கையைத் தியாகங்களால் செதுக்கியவள்.
 chokkamma
chokkamma beautiful smileAI Image
Updated on
MM strip
MM strip

வேலைக்காரி சொக்கம்மா

அவ மனம் சொக்க தங்கமம்மா

வாயில் நாலே நாலு பல்லம்மா

ஆனாலும் சிரிப்பா வெல்லமா

உடுக்க ஒரே ஒரு கிழிச புடவை

இருந்தது குள்ள ஓட்டை குடிசை

கணவன் எப்போதோ மறைந்தான்

ஒரே மகன் இருந்தான்

அவனும் ரயில் மோதி இறந்தான்

மாதமெல்லாம் வேலை செய்வா முதுகொடிஞ்சு

கிடைக்கும் வீட்டுக்கு ரூபாய் தலா அஞ்சு

எனக்கு அப்போ வயசு ஆறு

காலு நசுங்கி போனது... ஏறினது காரு

நான் ஆஸ்பத்திரி போன போது

என் மேல் அக்கறையில் அழுதா

நலம் பெற நாள் முழுதும் தொழுதா

நினைப்பேன் நான் அதை எப்போதும்

நன்றி சொல்லுவேன் இப்போதும்

ஒருநாள் விஷ ஜுரத்தில் கிடந்து

போனாள் சாப்பிடாமல் மருந்து

சொக்கம்மா ஒரு தேவதை

சொல்ல முடியும் நான் வேறெதை

கழிக்க வந்தாளோ ஏதோ சாபத்தை?

அல்லது கடுகளவு பாபத்தை? இன்று

போய் விட்டாள் நோக்கி வானத்தை!

logo
Kalki Online
kalkionline.com