
சித்திரையே வருக!
சிப்பிக்குள் நித்திலமே! சித்திரைத் திங்களே!
வருகவே வருக வருகவே.. யாண்டும்
ஈராறு திங்கள் கருவினில் வளர்ந்தே
பங்குனி இறுதியில் உதித்திடும் பைந்தமிழ்க்
குழவியே வருகவே! நலம் யாவும்
தருகவே! இதோ..காத்திருக்கிறான் கள்ளழகன்
மீனாட்சி கல்யாணம் நடத்திடவே....
மேகராணியவள் சல்லாத்துணி நாணியே
விலக..பூர்ணமாய் ஜொலிக்கும் நிலவுமகள்
மன்னவன் வருகை நாடியே காத்திருக்கிறாளோ?
குளிர்த்தீண்டலும் நீயே! நித்திரை போக்கியே
தகிக்கும் அக்கினி வெயிலும் நீயே..
வருகவே விசுவாவசுவே.. கலியுக தெய்வமாய்
மனிதர் தம்மில் விசுவாசங்கள் நிறைத்தே...
நாபா.மீரா
***********************
மலரும் விசுவாசுவுக்கு வரவேற்பு!
தமிழ் வருடம் குரோதிக்கு பிாியாவிடை,
மலரும் விசுவாசுவுக்கு வரவேற்பு
இத்தகைய நல்வேளையில் தமிழ்ப்புத்தாண்டே வருக,
பூரணத்துவம் தருக, என எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
புத்தாண்டில் சில பிரதிக்ஞை எடுப்போம்...
நயவஞ்சகம், குரோதம், விரோதம்,
அடுத்துக் கெடுக்கும் தன்மை, வஞ்சப்புகழ்ச்சி,
தீயசெயல், புறம்பேசாமை,
போன்ற தீய எண்ணங்களை குழிதோண்டி புதைத்திடுவோம்
என சபதமேற்போம்!
அன்பு, பாசம், எவ்வுயிா்க்கும் தீங்கு இழைக்காமை,
நல்ல செயல்களை செய்திடல்
பெண்மை மனிதநேயம் காத்தல்,
லஞ்சம் தவிா்த்து, நோ்மை கடைபிடித்து அறநெறியை வளா்த்து,
அனைவருக்கும் நல்லவராய் நடக்கும் தன்மையோடு
ஆசானை வணங்கி, பொியோரைக் காத்து
தாய்தந்தையரை மதித்து, பாலியல் பலாத்காரம் தடுத்து,
ஜாதி பாகுபாடு விலக்கி, மதுபோதையில் மயங்காமல்,
பிறன்மனை நோக்காமல் , நட்பு கெடாத நற்செயல் கடைபிடித்து,
அடிமைத்தனம் ஒழித்து, மனைவிக்கு மரியாதைகொடுத்து,
ஆன்மிகப்பணியில் ஈடுபாடுகொண்டு, அயராது உழைத்து,
அடுத்துக்கெடுக்காமல், எளியோரை ஏளனம் செய்யாமல்,
அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்கபாடுபட்டு
அறியாமை போக்கி , ஆன்றோா் சொல் மதித்து,
கற்றோரை மதித்து , சமதர்ம சமுதாயம் அமைத்து,
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாடுகளை கடைபிடித்து
இது போன்ற நோ்மறை சிந்தனை வளா்த்து
நல்ல விக்ஷயங்களை மேற்கொள்ள
புத்தாண்டில் பிரதிக்ஞை எடுப்போம் ,
விசுவாவசுவே வருக!
மனித மனங்களில் விடாமுயற்சி தொடர, விஸ்வாசமாய் பழகிட
சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் வாழ்ந்திட
வழிவகை செய்வாயோ?
- நா.புவனாநாகராஜன்