தொடர்கதை: அங்கம்மாவும் அரளிக்கொட்டையும்... - அத்தியாயம் 1

கிராமத்துச் சூழலில் மாட்டுத் தொட்டி விவகாரம் மற்றும் பழிவாங்கும் படலத்தை விவரிக்கும் சுவாரசியமான தமிழ்க் கதை.
Tamil Serial Story - Angammavum Aralikottaiyum
Tamil Serial Story - Angammavum AralikottaiyumImage Credit: ChatGPT
நாமக்கல் எம்.வேலு

கார்ப்பொரேஷன் வங்கியில் எழுத்தராக சேர்ந்து உதவிப் பொது மேலாளராக ஓய்வு பெற்றேன். 1988ல் நாமக்கல் கிளையில் இருக்கும்போது எழுத ஆரம்பித்து இதுவரை 200 கதைகளுக்கும் மேலாக எழுதியுள்ளேன். தினமலர்-வாரமலர், கதைமலர், தீபாவளிமலர், குமுதம், விகடன், குங்குமம், சாவி, மற்றும் கல்கி, மங்கையர்மலர், கோகுலம், சஹானா இணைய இதழ்களிலும் எழுதி உள்ளேன். தினமலர்-வாரமலரிலும் மங்கையர்மலர் - ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டியிலும், சஹானா இணைய இதழிலும், அன்னை குருபாக்கியம் நினைவு சிறுகதைப் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளேன்.

Updated on: 
MM strip
MM strip

தொடர்கதை: அங்கம்மாவும் அரளிக்கொட்டையும்... - அத்தியாயம் 1

''மினுக்கி முத்தம்மா... இன்னிக்கு உன்னை நான் உண்டு இல்லைன்னு பண்ணிடறேன் பாருடி...'' என்று கறுவியபடியே இடுப்புச் சேலையை இழுத்து செருகிக்கொண்டு கிணற்றுமேட்டுப்பக்கம் விரைந்தாள் அங்கம்மா. அங்கேதான் அரளிச் செடிகள் காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்தன.

அண்ணனும் தம்பியும் பக்கம்பக்கமாக இரண்டு வீடுகளில் குடியிருக்கின்றனர். பெரியவன் மூக்கன், சின்னவன் முனியன். பெரிய ஒர்ப்படியார் முத்தம்மா... சின்ன ஒர்ப்படியார் அங்கம்மா.

'ஐந்து வயதில் அண்ணன் தம்பிகள், பத்து வயதில் பங்காளிகள்' என்பது அவர்களுக்குத்தான் கனக்கச்சிதமாய் பொருந்தும். காரணம், அப்படி அவர்கள் கண்டகண்டதுக்கெல்லாம் சண்டை போட்டுக்கொள்வதுதான்.

அண்ணன்காரன் ஒரு தடவை தனது வயலில் டிராக்டர் விட்டு உழும்போது பொதுவரப்பை ஒட்டி கலப்பையை விட்டுவிட்டான். தம்பிக்காரன் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தான்.

''இவன் என்ன பொது வரப்பை வெட்டி இவனோட வயலை அகலப்படுத்திக்கப் பார்க்கறானா...? பிச்சைக்காரன்...'' என்று சண்டைக்கட்டினான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com