தொடர்கதை: அங்கம்மாவும் அரளிக்கொட்டையும்... - அத்தியாயம் 3

கிராமத்துச் சூழலில் மாட்டுத் தொட்டி விவகாரம் மற்றும் பழிவாங்கும் படலத்தை விவரிக்கும் சுவாரசியமான தமிழ்க் கதை.
Tamil Serial Story - Angammavum Aralikottaiyum
Tamil Serial Story - Angammavum AralikottaiyumImage Credit: ChatGPT
நாமக்கல் எம்.வேலு

கார்ப்பொரேஷன் வங்கியில் எழுத்தராக சேர்ந்து உதவிப் பொது மேலாளராக ஓய்வு பெற்றேன். 1988ல் நாமக்கல் கிளையில் இருக்கும்போது எழுத ஆரம்பித்து இதுவரை 200 கதைகளுக்கும் மேலாக எழுதியுள்ளேன். தினமலர்-வாரமலர், கதைமலர், தீபாவளிமலர், குமுதம், விகடன், குங்குமம், சாவி, மற்றும் கல்கி, மங்கையர்மலர், கோகுலம், சஹானா இணைய இதழ்களிலும் எழுதி உள்ளேன். தினமலர்-வாரமலரிலும் மங்கையர்மலர் - ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டியிலும், சஹானா இணைய இதழிலும், அன்னை குருபாக்கியம் நினைவு சிறுகதைப் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளேன்.

Updated on: 
MM strip
MM strip

தொடர்கதை: அங்கம்மாவும் அரளிக்கொட்டையும்... - அத்தியாயம் 3

''முத்தம்மா... இன்னிக்கு செத்ததடி உன் மாடுங்க மொத்தமா....'' என்று மனதுக்குள் கறுவிக்கொண்டாள் இவள்.

வேகவேகமாய் வீட்டைச் சுற்றிக்கொண்டு முன்பக்கம் ஓடிவந்தவள் வாளியில் இருந்த தண்ணீரை அள்ளி அள்ளி கிண்ணத்தைக் கழுவிவிட்டு,

வாளியைத் தூக்கிக்கொண்டு போய் அம்மியையும் கல்லையும் கழுவிப் போட்டுவிட்டு திரும்பிவந்து கைகால்களையும் நன்றாக சோப்புப் போட்டு கழுவிக்கொண்டு போய் திண்ணையில் பெருமூச்சொன்றை விட்டபடி அக்கடாவென உட்கார்ந்தாள்.

'மூங்கில் தட்டியைப் போட்டு மூடாமல் வந்திருக்க வேண்டுமோ. மூடாமல் விட்டிருந்தால்தானே மாடுகள் எழுந்துவந்து தண்ணீர் குடிக்கும். நுரை தள்ளி சாகும்... தப்புப் பண்ணிவிட்டோமே...' சிந்தனை ஓட்டமாய் ஓடியது.

அவளது மாடுகளை விரட்டிவிட்டிருந்தால். அவை அங்கே இங்கே என்று மேய்ந்துவிட்டு மறுபடியும் அவர்களது தொட்டிக்குத் திரும்பும். ஆனால் எப்படி தண்ணீர் குடிக்கும். தப்பு பண்ணிவிட்டோமோ என்று எண்ணினாள்.

பொழுதைப் பார்த்தாள். மணி எப்படியும் ஒன்று ஆகியிருக்கும்போல இருந்தது. ரங்கன் ஆடு மாடுகளை மேய்க்க ஒட்டிக்கொண்டு போயிருந்தான். அவன் வரும் நேரம்தான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com