தொடர்கதை: தீபாவளியின் மறுபக்கம் - அத்தியாயம் 3

தொடர்கதை | Mother, Father and daughter celebrate Diwali
தொடர்கதை | Mother, Father and daughter celebrate DiwaliImage credit: AI Image
செ.ஹரிஷ்

வணக்கம், என் பெயர் செ.ஹரிஷ். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அ.இராமலிங்கபுரம் என்ற கிராமமே எனது ஊர். சிறுவயதிலிருந்தே எனக்கு எழுத்தார்வம் நன்றாக வந்தன. அதனால் பல கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு சில வெற்றிகளையும் பெற்றுள்ளேன். இப்போது எனக்கு வயது 19, கட்டுரையோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சிறுகதைகள், கவிதைகள், ஜோக்ஸ் என்று எழுத தொடங்கியுள்ளேன். ஒரு சில சிறுகதை போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளேன். மேலும் எனது படைப்புகள் கல்கி இணையதளத்தின் மூலம் மக்களிடம் சென்றடைவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றியை கல்கி குழுமத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்துப் பணி எளிய மக்களுக்கும் புரியும் வகையில் தொடரும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்!

Updated on
MM strip
MM strip

பொழுது விடிந்தது. சேவல் கூவியது.

செல்வி முகத்தை கழுவி விட்டு, ஒரு செம்பு தண்ணீரை குடித்துவிட்டு, கதவை மெல்ல சாத்தியபடி, செப்பலை போட்டுக்கொண்டு வெளியங்காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

இங்கு வீட்டில், முத்துச்சாமி மெல்ல கதவை திறந்தார். தங்கக் குட்டி மகள் அழகாக படுத்திருப்பதை அருகில் உட்கார்ந்து இரசித்தார்.

“செல்ல குட்டிமா”என்றபடி மகளின் கன்னத்தில் முத்தமிட்டார்.

சத்யா லேசான பார்வையில் அப்பாவை பார்த்ததும், உடனே எழுந்திருச்சு அப்பாவை கட்டிப் பிடித்தாள். சந்தோஷத்தில் வார்த்தைகள் ஒன்றும் வரவில்லை. முத்துச்சாமி மகளை விடாமல் கொஞ்சி, பாச மழையில் நனைத்தார்.

“சத்தி குட்டி உனக்காக அப்பா புது ட்ரஸ்சு, ஸ்வீட்டு, வெடி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்..” என்றபடி  மகளிடம் புது ட்ரெஸ்சை கொடுத்தார்.

வெளியங்காட்டிற்குச் சென்ற செல்வி வீடு திரும்பினார். கை, கால்களை கழுவி விட்டு வீட்டிற்குள் சென்றவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com