தொடர்கதை: தீபாவளியின் மறுபக்கம் - அத்தியாயம் 1

தொடர்கதை | Mother and daughter
தொடர்கதை | Mother and daughterImage credit: AI Image
செ.ஹரிஷ்

வணக்கம், என் பெயர் செ.ஹரிஷ். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அ.இராமலிங்கபுரம் என்ற கிராமமே எனது ஊர். சிறுவயதிலிருந்தே எனக்கு எழுத்தார்வம் நன்றாக வந்தன. அதனால் பல கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு சில வெற்றிகளையும் பெற்றுள்ளேன். இப்போது எனக்கு வயது 19, கட்டுரையோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சிறுகதைகள், கவிதைகள், ஜோக்ஸ் என்று எழுத தொடங்கியுள்ளேன். ஒரு சில சிறுகதை போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளேன். மேலும் எனது படைப்புகள் கல்கி இணையதளத்தின் மூலம் மக்களிடம் சென்றடைவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றியை கல்கி குழுமத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்துப் பணி எளிய மக்களுக்கும் புரியும் வகையில் தொடரும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்!

Updated on
MM strip
MM strip

வானம் கருகருவென்று மேகமூட்டத்துடன் இருந்தது. மேகத்திற்குள் மின்னல் அங்கும் இங்கும் பளிச் பளிச்சென்று வந்து மறைந்தது. சூரியன் மறைந்து மெல்ல இருள் சூழ ஆரம்பிக்கும் நேரம் அது…! குருவிகளும், காக்கைகளும் தங்களின் கூட்டை நோக்கி பறந்த வண்ணம் இருந்தன. 

அப்போது செல்வி வேலை முடிந்து களைப்புடன் ஒத்தையடிப் பாதையில் வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். உடம்பெல்லாம் ஒரே வெடி மருந்து வாடை குப்பென்று அடித்தது. வெடி மருந்தால் கையெல்லாம் அடர் கருப்பாக மாறியிருந்தது. 

நடந்து வரும்போதே, இருமல் வாட்டியெடுத்தது. கையை மூக்குக்கு கொண்டு போகாமல், திக்கு முக்காடி எப்படியோ வீட்டை அடைந்தார். 

வீட்டிற்கு வெளியே நின்று மகளிடம், “சத்தி குட்டி அம்மாக்கு சுடுதண்ணி கொண்டு வாமா..!” 

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com