தொடர்கதை: சினேகாவின் கல்யாணக் காவியம் - அத்தியாயம் 4

Snehavin Kalyana Kaviyam - Chapter 4
Snehavin Kalyana Kaviyam - Chapter 4AI Image
சகா

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
MM strip
MM strip

“கொஞ்சம் டைம் கொடுங்க, சரி பண்ணிடறோம். அவசரப்பட வேணாம். கல்யாணத்தை நல்லபடியா நடத்திடலாம்.. ஏங்க கூட்டம் போடாதீங்க ப்ளீஸ். கொஞ்சம் காத்து விடுங்க எல்லோரும் கீழே போய் உட்காருங்க தயவுசெய்து..” என கெஞ்சிக் கொண்டிருந்தான் ரமேஷ்.

யார்யாரோ வந்து அவனை கண்காட்சிப் பொருள் போல வேடிக்கை பார்த்துப் போனார்கள்.

“எப்பய்யா எந்திரிப்பான் உங்க மாப்பிள்ளை, நாளைக்கா.?”

“போலீசைக் கூப்பிடுங்க முதல்ல. கல்யாணமாடா பண்றீங்க, மோசடிக் காரங்களா.”

“நூத்தியெட்டுக்கு கூப்பிடுங்க. சரி பண்ணிடுவாங்க..”

“கல்யாணச் செலவை எடுத்து வைய்யா முதல்ல. லட்சம்லட்சமா செலவு பண்ணி கல்யாணத்தை நடத்தினா..”

“குடிச்சவனை உடனே எழுப்பறதுக்கான வைத்தியம் யாருக்காவது தெரியுமா, ஆயிரம் ரூபாய் தர்றேன்.”

“கூகுள்ல தேடுங்க. சாட்ஜிபிடி கிட்ட ஐடியா கேளுங்க..”

“மாப்பிள்ளைக்கு பெண்ணைப் பிடிக்கலையாம். அதான் விசம் குடிச்சுட்டாரு.”

“அதில்லை, மாப்பிள்ளைக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சாம்..”

ரமேஷ்க்கு தலை சுற்றியது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com