

உப்பின் கதை - யாரும் தனியாகச் சாப்பிடாதது…
வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து சமையலை முடித்து, வீட்டின் மற்ற வேலைகளையும் செய்துவிட்டு அலுவலகத்திற்குக் கிளம்பிவிட்டாள் ராகவி.
அவளது வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் அவளது அலுவலகம் இருந்தது. அதனால் பத்து நிமிடங்களுக்கு முன் கிளம்பினாலே போதும்.
மதிய இடைவேளையில் வீட்டிற்கே வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வாள். மாலை அலுவலகம் முடிந்ததும் மீண்டும் வீடு. குடும்பம், குழந்தைகள், சமையல், என்று அவளது வாழ்க்கை எப்போதும் ஓட்டமாகவே இருந்தது.
காலை முதல் இரவு வரை குடும்பத்திற்காக ஓடுவாள்.
அந்த ஓட்டமே அவளது வாழ்க்கையாகிப் போயிருந்தது.
ஆனால், ஒருநாள் அந்த ஓட்டம் ஓய்ந்தது..
பல ஆண்டுகள் உழைத்த பிறகு, ராகவியும் ராஜுவும் ஓய்வு பெற்றார்கள்.
முதல் சில நாட்கள் ராகவிக்கு ஓய்வு இனிமையாக இருந்தது.
பிறகு… அது பழக்கமில்லாத அமைதியாகத் தோன்றியது.