தொடர்கதை: உப்பா? சர்க்கரையா? அத்தியாயம் 2

தனித்துவமான போராட்டம் மற்றும் வெற்றியின் பயணத்தை விவரிக்கும் அழகான தொடர்கதை.
Uppa? Sakkaraiya? - தொடர்கதை: உப்பா? சர்க்கரையா?
தொடர்கதை: உப்பா? சர்க்கரையா?Image Credit: ChatGPT
கல்பனா ராஜகோபால்

கல்பனா ராஜகோபால், பள்ளிப் பருவம் முதலே தமிழ் வாசிப்பிலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது கவிதைக்கு டாக்டர் அப்துல் கலாமிடமிருந்து வாழ்த்துக் கடிதம் பெற்றுள்ளார். மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியான இவரது கவிதை பரிசு வென்றது. பணி ஓய்வுக்குப் பின் கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 
MM strip
MM strip

தொடர்கதை: உப்பா? சர்க்கரையா? - அத்தியாயம் 2

உறுதியின் நெருப்பு

“என்னால் முடியாது என்ற வார்த்தை அவள் அகராதியில் இல்லை…”

காலங்கள் உருண்டோடின.

பருவ வயதில் கனவுகளோடு நின்ற ராகவியின் வாழ்க்கையும் மாறியது.

அவள் நினைத்திருந்த பல கனவுகள், சூழ்நிலைகளால் மெல்ல மெல்ல பின்னுக்குத் தள்ளப்பட்டன.

அவளைவிட பத்து வயது மூத்தவரான ராஜுவுடன் திருமணம் நடந்தது.

புதிய வீடு புது அத்தியாயம் தொடங்கியது.

வாழ்க்கையில் திருமணத்திற்குப் பிறகும் சவால்கள் குறையவில்லை.

பண நெருக்கடியால் பல நாட்களில் நிம்மதி இல்லாமல் போனது.

ராகவியின் கைகளில் இரண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு இருந்தது.

இதற்கிடையில் தன்னால் முடிந்த ஒரு சிறிய வேலையைத் தேடிக்கொண்டாள்.

சொற்ப சம்பளம் என்றாலும் அது அவளது சுயநிறைவை நோக்கிய முதல் படியாக இருந்தது.

சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை வீட்டுச் செலவுக்கும், ஒரு பகுதியைச் சேமிப்புக்கும் வைத்தாள். மற்றொரு பகுதியைத் தன் திறமையை வளர்த்துக்கொள்ளப் பயன்படுத்தினாள்.

Loading content, please wait...