தொடர்கதை: உப்பா? சர்க்கரையா? அத்தியாயம் 3

தனித்துவமான போராட்டம் மற்றும் வெற்றியின் பயணத்தை விவரிக்கும் அழகான தொடர்கதை.
Uppa? Sakkaraiya? - தொடர்கதை: உப்பா? சர்க்கரையா?
தொடர்கதை: உப்பா? சர்க்கரையா?Image Credit: ChatGPT
கல்பனா ராஜகோபால்

கல்பனா ராஜகோபால், பள்ளிப் பருவம் முதலே தமிழ் வாசிப்பிலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது கவிதைக்கு டாக்டர் அப்துல் கலாமிடமிருந்து வாழ்த்துக் கடிதம் பெற்றுள்ளார். மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியான இவரது கவிதை பரிசு வென்றது. பணி ஓய்வுக்குப் பின் கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 
MM strip
MM strip

தொடர்கதை: உப்பா? சர்க்கரையா? அத்தியாயம் - 3

சுவை தந்த வாழ்க்கை

“கரைந்தாலும்… அதன் சுவை மறைவதில்லை.”

விருது வழங்கும் நாள்.

பெரிய அரங்கம். பல நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், கேமராக்கள் என அரங்கமே பரபரப்பாக இருந்தது. அனைவரது கவனமும் மேடையின்மீது இருந்தது.

முதல் வரிசையில் ராகவியின் பெற்றோர் ரஞ்சனி மற்றும் பெரியம்மா திவ்யா ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

“இந்த ஆண்டின் சிறந்த நிறுவனத் தலைவி விருது…”

சிறிது நேரம் இடைவெளி விட்ட அறிவிப்பாளர்,

“திருமதி ராகவி அவர்களுக்கு!”

என்று அறிவித்தார்.

அரங்கம் முழுவதும் கைதட்டல் ஒலித்தது.

ராகவி மெதுவாக எழுந்தாள். அருகில் அமர்ந்திருந்த ராஜுவின் முகத்தில் பெருமை தெரிந்தது. சரத் எழுந்து நின்று உற்சாகமாகக் கைதட்டிக்கொண்டிருந்தான்.

மேடைக்குச் சென்ற ராகவி விருதைப் பெற்றுக்கொண்டாள்.

விருதை கையில் வாங்கிய அந்த நொடியில், அவளது மனக்கண்ணில் பழைய நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துபோயின.

முதலில் நினைவுக்கு வந்தது அந்தச் சிறிய அறையில் இருந்த அவளின் தொடக்கம்.

Loading content, please wait...