சிறுகதை: வெள்ளரிப்பிஞ்சு

இக்கதை வெறும் வறுமையை மட்டும் பேசாமல், ஒரு ஏழைத் தாய் தன் மகனின் எதிர்காலத்திற்காகக் கொண்டிருக்கும் தீராத தாகத்தையும் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
Annalakshmi selling cucumber
Annalakshmi selling cucumberAI Image
பெ. சிவக்குமார்

வணக்கம்!  என்னுடைய பெயர் பெ.சிவக்குமார். விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள குலசேகரநல்லூர் என்னும் குக்கிராமத்தில் இருந்து எழுதி வருகிறேன்.நான் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே தமிழ் மொழியில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்லூரிக்கு வந்த பிறகு தான் கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவைகளை  எழுத சிறப்பாகக் கற்றுக் கொண்டேன்.  கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். என்னுடைய எழுத்துகள் எப்பொழுதும் வாசகர்களின் மனதில் “பசுமரத்தாணி போல” பதியுமாறுதான் எழுதுவேன்.  என்னுடைய படைப்புகள் அனைத்தும் கரிசல் மண் சார்ந்தவைகளாக இருக்கும். என்னுடைய படைப்புகளை வெளியிடும் கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

Updated on
MM strip
MM strip

விரைவாக எழுந்து சமையல் வேலை எல்லாம் முடித்து விட்டு சாப்பிடுவதற்கு தூக்கு வாளியில் ரசஞ்சோறும் உருளைக்கிழங்கையும் எடுத்துகிட்டு போகும்போது,

“தம்பி சாப்பாடு பண்ணி வச்சிருக்கேன் அம்மா! சாப்பிட்டு பள்ளிக்கூடத்துக்கு போ தம்பி! அம்மா போயிட்டு வரேன் வியாபாரத்துக்கு” என்று தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய மகன் செல்லமுத்துவிடம் சொல்லிக்கொண்டே அவசரமா ரெண்டு கட்டப்பையை எடுத்துக்கிட்டு பஸ் ஸ்டாண்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் அன்னலட்சுமி.

இன்னைக்கு கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு. ராத்திரி நல்ல தூக்கம் உடம்பு அடித்துப் போட்டது போல ஒரே வலி. அங்கேயும் இங்கேயும் அலைந்து வியாபாரம் பார்க்கிறதுக்குள்ளயும் என்னநோன்னு ஆயிடுது. பாவம் என்ன செய்ய அவளுக்கு இதை விட்டா வேற பொழப்பு இல்லை. அஞ்சு மணி வண்டியை விட்டு விட்டு 5:30 மணி வண்டிக்கு காத்திருந்தாள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com