சிறுகதை: ஆடு பகை குட்டி உறவு

இந்தக் கதை, குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் ஈகோ மற்றும் சிறு சிறு பிணக்குகளை அன்பால் எப்படிச் சரி செய்யலாம் என்பதை அழகாகச் சொல்கிறது.
மாலதி, கணவன் ரவி, மாமியார் மற்றும் தாய் தந்தை
மாலதி, கணவன் ரவி, மாமியார் மற்றும் தாய் தந்தைAI Imge
Updated on
MM strip
MM strip

"ஏங்க இங்க வாங்களேன்! ஒரு சேதி," என மாலதி கணவன் ரவியை செல்லமாக அழைத்தாள்.

"சொல்லு மாலதி என்ன விஷயம்?" ரவி கேட்டான் !

"பொிசா ஒண்ணுமில்லீங்க.. இன்னைக்கு காரடையான் நோன்பு. அதுக்கு அடை எப்படி செய்யறதுன்னு எனக்கு தொியல. எங்க அம்மாவுக்கும் தொியாது. அவங்களுக்கு நோன்பும் இல்லை. அவங்க கலப்பு திருமணம் ஆனவங்களாச்சே! அதனால ஹோம்ல இருக்கற உங்க அம்மாவை பாத்து எப்படி நோன்பு செய்யறதுன்னு விபரம் கேட்டு எழுதிகிட்டு வாங்க. போன நோன்பு வரை அத்தை நம்மோட இருந்தாங்க. இப்பதான் ஹோம்ல சேர்ந்துட்டாங்களே," என்றாள் மாலதி.

சரி, “டியூட்டி முடிஞ்சு வரும்போது போய் அம்மாவை பாா்த்துட்டு வரேன்," என்றான் ரவி.

“அப்புறம் நீங்க வரும்போது அடையாா்ல இருக்கற எங்க அம்மா, அப்பாவை நோன்புக்கு அழைச்சிட்டு வாங்க," என்றாள் மாலதி.

மாலை அம்மா சொன்ன விபரப்படி நோன்புக்குண்டான பொருட்களுடன் வந்ததோடு, "அப்பாவும், அம்மாவும் ஈவ்னிங் வரேன்னு சொன்னாங்க. அதனால நானு வந்துட்டேன்," என்றான் ரவி.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தொலைந்த இலக்கு!
மாலதி, கணவன் ரவி, மாமியார் மற்றும் தாய் தந்தை

பரபரப்பாய் நோன்பு வேலைகளை பாா்த்தாள் மாலதி!

மாலை 6 மணி வாசலில் காா் வந்து நின்றது.

மாலதியின் பெற்றோா் வந்தார்கள்.

தவுசன் வாட்ஸ் விளக்கின் ஒளியாய் மாலதியின் முகம் பிரகாசித்தது. ரவி வரவேற்றான்.

மாலதி நோன்பை முடித்து மஞ்சள் சரடை கணவன் கையால் தனது கழுத்தில் கட்டச்சொன்னாள். ரவியும் அவ்வாறே செய்தான்.

மாலதி தன்னுடைய அப்பா அம்மா காலில் விழுந்து ஆசீா்வாதம் வாங்க வந்தாள்!

அப்பாவும் அம்மாவும் மாலதியை தடுத்தாா்கள். வாசலுக்கு போனாா்கள். மாலதியும் பின் தொடர்ந்தாள், “ஏம்மா என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் ஆசீா்வாதம் செய்யாம வெளியில வந்துட்டீங்க?”

“அதுவா, காா்ல உன்னோட மாமியாா் இருக்காங்க. அவங்க கிட்ட முதல்ல ஆசீா்வாதம் வாங்கிட்டு வா. அப்புறம் நாங்க ஆசீா்வாதம் செய்யறோம்...” என்றாா்கள் கோரசாக.

மாலதி முகம் வாடியது. அவளும், ரவியும் தயங்கவே, மாலதியின் அப்பாவே தொடர்ந்தாா்!

அம்மா மாலதி “நீரடிச்சு நீர் விலகாது, நாங்க காரடையான் நோன்புக்கு வரலை. நானும் உங்க அம்மாவும் உன்னோட அண்ணன் வீட்டோட மைசூா்ல போய் செட்டிலாகறோம். எங்களுக்கு துணைக்காக சம்பந்தியையும் ஹோம் போய் அழைச்சிக்கிட்டு போறோம். காலைல கிளம்பறோம். மாா்னிங் 9 மணிக்கு மைசூா் எக்ஸ்பிரஸ்ல புறப்படறோம்.

முடிஞ்சா ரவியும் நீயும் அடையாருக்கு வந்துட்டு போங்க. நீ உன்னோட மாமியாா்கிட்ட பேசவும் வேண்டாம். ஆசீா்வாதமும் வாங்க வேண்டாம்...” என கோபமாக கூறிவிட்டு மனைவியுடன் புறப்பட்டாா் மாலதியின் தகப்பனாா்.

ரவியும் மாலதியும் அப்செட் ஆனாா்கள். இரவு முழுவதும் தூங்கவே இல்லை.

இருவரும் ஒரு முடிவுக்கு வந்து காலையில் கிளம்பினாா்கள். காா் இடையிலேயே ரிப்போ். அம்மா அப்பாவுக்கு போன் செய்து பாா்த்தாள் மாலதி.

நாட் ரீச்சபுள் சொல்லியது!

காரை ரிப்போ் செய்துவிட்டு போவதற்குள் மணி எட்டு முப்பது. சரி, இனி அடையாறு போவதைவிட எக்மோா் போய் ரயிலைப் பிடிப்போம் என புறப்பட, மைசூா் எக்ஸ்பிரஸ் கிளம்பி விட்டது.

இருவரும் வருத்தமுடன் கார் பக்கம் வந்தாா்கள்.

அப்போது எதிரே அம்மா, அப்பா, மாமியாா் மூவரும் காாிலிருந்து இறங்கினாா்கள்.

மாலதி மாமியாா் காலில் விழுந்தாள்!

கொண்டு வந்திருந்த நோன்பு அடையை மாமியாா் வாயில் ஊட்டினாள்.

மாலதியும், மாமியாா் கையைப்பிடித்து தன்னுடைய அடிவயிற்றில் வைத்தாள். மாமியாருக்கு இரட்டிப்பு சந்தோஷம். நாள் தள்ளி போயிருக்கு என்றாள் மாலதி.

ரவியும், மாமனாா், மாமியாரும் 'மாப்ளே நீங்களும் நானும் போட்ட ஐடியா நல்லா ஒர்க் அவுட் ஆயிடுச்சு' என மைண்ட் வாய்சில் பேசியது யாா் காதிலும் விழவில்லை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நேரம்!
மாலதி, கணவன் ரவி, மாமியார் மற்றும் தாய் தந்தை

“அப்பாடா பிரசவத்திற்கு ஒத்தாசைக்கு பிரச்னை இல்லை” என மாலதியின் அம்மாவின் மைன்ட் வாய்ஸ் ரவி அம்மா காதில் விழாமல் இல்லை!

logo
Kalki Online
kalkionline.com