சிறுகதை: அழியாத நினைவுகள்

குடும்பத்தின் வலிமையையும், அன்பின் நீடித்த தன்மையையும் அருமையாகப் பிரதிபலிக்கும் சிறுகதையை படிக்கலாம் வாங்க...
பாட்டி பேரனுக்கு தங்க செயின் போடுகிறார்.
Tamil Short Story : அழியாத நினைவுகள்AI Image
கல்பனா ராஜகோபால்

கல்பனா எனும் நான் பள்ளிப் பருவத்திலிருந்தே என்னுள் இருக்கும் தமிழார்வத்தால் புத்தகம் வாசிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என் கவிதைக்கு முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் பெற்று உள்ளேன். என் கவிதை முதன் முதலில் மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியாகி அதற்கு பரிசும் பெற்றேன். பணி ஓய்வுக்கு பிறகு என் எழுத்துப் பணியை கல்கி ஆன்லைனில் தொடந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு நல்கிய. கல்கிக் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Updated on
MM strip
MM strip

மனதில் சிறு தடுமாற்றத்துடன் தன் கையில் இருந்த பையை இறுகப் பிடித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள் கோமதி. அவளது முகத்தில் அமைதி இருந்தாலும், மனதில் பெரும் அலைகள் எழுந்து கொண்டிருந்தன. கண்களில் திரண்ட கண்ணீரை யாரும் கவனிக்காதபடி துடைத்து, மேடையில் இருந்த மகள் கவிதாவை பார்த்து மெதுவாக சிரித்தாள்.

அன்று கவிதாவின் மகன் ராகுலின் முதல் முடி எடுக்கும் நாள். வீடு முழுவதும் சொந்த பந்தங்கள், நண்பர்கள் என்று வீடு ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. வாசலில் தோரணங்கள், உள்ளே சர விளக்குகள் மற்றும் பூத்தோரணங்கள் கட்டி அலங்கரிக்கச் சொல்லி இருந்தாள் கோமதி.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com